முல்லைக்கு தேர் கொடுத்த பாரியைப் போல் தெரு நாய்க்காக கருவி செய்து கொடுத்த பொறியாளர்..! Description: முல்லைக்கு தேர் கொடுத்த பாரியைப் போல் தெரு நாய்க்காக கருவி செய்து கொடுத்த பொறியாளர்..!

முல்லைக்கு தேர் கொடுத்த பாரியைப் போல் தெரு நாய்க்காக கருவி செய்து கொடுத்த பொறியாளர்..!


முல்லைக்கு தேர் கொடுத்த பாரியைப் போல்    தெரு நாய்க்காக கருவி செய்து கொடுத்த பொறியாளர்..!

தமிழர்களும் எப்போதுமே ஜீவராசிகளின் மேல் அளவு கடந்த அன்பு கொண்டவர்கள். அதனால் தான் பெரும்பாலான தமிழர்கள் தங்கள் வீடுகளில் ஆடு, மாடு, கோழி என ஏதாவது ஒன்றை வளர்ப்பார்கள். கிராமப் பகுதிகளில் இதை அதிகமாகக் காணமுடியும். அதை உறுதி செய்யும் வகையில் பாண்டிச்சேரியில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஜீவராசிகளின் மேல் தமிழர்கள் அன்பு செலுத்துவது இன்று, நேற்று அல்ல..பாரம்பர்யமாகவே நிகழ்ந்து வருகிறது. நம் இலக்கியங்களில் கூட பாரி வேந்தன் முல்லைக்கொடிக்கு தேர் கொடுத்ததை படித்திருப்போம். பாண்டிச்சேரியில் அப்படித்தான் ஒரு பொறியாளர் ஒரு குட்டி நாய்க்காக செய்த செயல் உருக வைக்கிறது.

புதுச்சேரி ரயில் நிலைய பகுதியில் தெருநாய் ஒன்று இரண்டு மாதங்களுக்கு முன்பு குட்டி போட்டது. அது தன் குட்டிகளுடன் சென்ற போது நான்கு சக்கர வாகனம் ஒன்று மோதி தாய் நாய் இறந்தது. மேலும் ஒரு குட்டியின் இரு பின்னங்கால்களும் சேதமானது. தாய் இறந்துவிட்ட நிலையில் இந்த குட்டி நாயால் நடக்க முடியவில்லை. இதை அந்த வழியாக வந்த புதுச்சேரி முதலியார் பேட்டை விடுதலை நகரைச் சேர்ந்த பொறியாளர் அசோக்ராஜ் பார்த்தார்.

அவர் உடனே அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அவர்களும் சிகிட்சை அளித்தனர். ஆனாலும் குட்டியானது இரு பின்னங்கால்களையும் தரையில் வைத்து தேய்த்து இழுத்துக் கொண்டே வந்தது. அப்போது தான் அசோக்ராஜ்க்கு மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி இருப்பதைப் போல், இந்த நாய்க்கும் ஒன்று செய்தால் என்ன எனத் தோன்றியது. இதற்கென்று தன் வீட்டில் இருக்கும் பழைய பைகளில் வண்டியும், அது உருண்டு செல்ல வசதியாக குழந்தைகள் சைக்கிளில், சைக்கிள் கவிழ்ந்து விடாமல் இருக்க பயன்படுத்தும் சின்ன சக்கரத்தையும் வைத்து வண்டி செய்தார்.

அந்த வண்டியை நாயின் உடலில் பொருத்தினார். இப்போது அந்த நாயால் பெரிதாக இல்லாவிட்டாலும், ஓரளவு நடக்க முடிகிறது. இந்த ஆனந்த்ராஜ் புதுச்சேரியில் செயல்பட்டு வரும் வாய்ஸ் பார் வாய்ஸ்லெஸ் அமைப்பின் தலைவராகவும் உள்ளார்.

இவரை நாமும் பாராட்டலாம் தானே நண்பர்களே...


நண்பர்களுடன் பகிர :