வசூல்ராஜா பட பாணியில் கட்டிப்பிடி வைத்தியம்... ஆஸ்பத்திரியையே குலுங்கி சிரிக்க வைத்த கணவர்..! Description: வசூல்ராஜா பட பாணியில் கட்டிப்பிடி வைத்தியம்... ஆஸ்பத்திரியையே குலுங்கி சிரிக்க வைத்த கணவர்..!

வசூல்ராஜா பட பாணியில் கட்டிப்பிடி வைத்தியம்... ஆஸ்பத்திரியையே குலுங்கி சிரிக்க வைத்த கணவர்..!


வசூல்ராஜா பட பாணியில் கட்டிப்பிடி வைத்தியம்...   ஆஸ்பத்திரியையே குலுங்கி சிரிக்க வைத்த கணவர்..!

ஆஸ்பத்திரியில் நடந்த ஒரு சம்பவம் இது. ஆனால் ஆஸ்பத்திரியில் சிரிப்புக்கு என்ன வேலை என்கிறீர்களா? வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் படம் நினைவில் இருக்கிறதா? கமலஹாசன், பிரபு கூட்டணியில் சக்கைபோடு போட்ட படம். அதில் கமல் கட்டிப்பிடி வைத்தியம் செய்வார் அல்லவா? அதே போல் ஒரு மருத்துவமனையில் நடந்த நிஜ சம்பவம் இது.

ஆனால் இங்கு கட்டிப்பிடி வைத்தியம் செய்வது மருத்துவர் அல்ல. நோயாளி. பயமிகுதியில் அவரே தன் மனைவியை அழைத்து கட்டிப்பிடி வைத்தியம் செய்து கொண்டார். 40 வயது நிரம்பிய அந்த வாலிபருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. உடனே அவரை குடும்பத்தினர் மருத்துவமனைக்கு செல்லும்மாறு சொன்னார்கள். ஆனால் அவருக்கோ ஊசி என்றாலே பயம். கடைசியாக குடும்பத்தினரே அவரை விடாப்பிடியாக இழுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு வந்தனர்.

ஆனால் அவர் மருத்துவரிடம் பச்சைக் குழந்தைகளைப் போல ஊசி வேண்டாம் என முரண்டுபிடிக்க ஆரம்பித்து விட்டார். ஒருகட்டத்துக்கு மேல் மருத்துவர் வலிக்காது என சமாதானம் சொல்லியும் கேட்கவில்லை. தன் மனைவியை கட்டிப்பிடித்து அழ ஆரம்பித்தார்.

அவர் நீண்ட நேரம் சமாதானம் செய்ய அவரோ மாதா...மாதா என இறை வேண்டலோடு மீண்டும் அழ ஆரம்பித்தார். அவரை சமாதானம் செய்து ஊசி போடுவதற்கு அந்த மருத்துவமனை பட்ட பாட்டை வீடீயோவில் பாருங்கள்..

இதைத்தான் மீசை வைச்ச குழந்தை என்பதா?


நண்பர்களுடன் பகிர :