அரசு கொடுக்கும் 2000 ரூபாய் உங்களுக்கு கிடைக்குமா? உங்க ரேசன்கார்டிலேயே ஈஸியா தெரிஞ்சுக்கலாம்..! Description: அரசு கொடுக்கும் 2000 ரூபாய் உங்களுக்கு கிடைக்குமா? உங்க ரேசன்கார்டிலேயே ஈஸியா தெரிஞ்சுக்கலாம்..!

அரசு கொடுக்கும் 2000 ரூபாய் உங்களுக்கு கிடைக்குமா? உங்க ரேசன்கார்டிலேயே ஈஸியா தெரிஞ்சுக்கலாம்..!


அரசு கொடுக்கும் 2000 ரூபாய் உங்களுக்கு கிடைக்குமா?   உங்க ரேசன்கார்டிலேயே ஈஸியா தெரிஞ்சுக்கலாம்..!

தமிழக அரசு பொங்கல் பரிசாக ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் 1000 ரூபாய் வழங்கி அசத்தியது. அதன் தொடர்ச்சியாக தற்போது ஏழைத் தொழிலாளர் குடும்பங்களின் நலன் கருதி குடும்ப அட்டைக்கு 2000 ரூபாய் வழங்கப்படுகிறது.

ஒரு மாத கேப்பிலேயே இப்படி ஒரு ஜாக்பாட்டா என மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இப்படியான சூழலில் உங்கள் குடும்ப அட்டைக்கு 2000 ரூபாய் கிடைக்குமா? என நீங்கள் குழம்பிப் போயிருப்பீர்கள். அதை மிக எளிமையாகக் கண்டுபிடித்து விடலாம்.

உங்கள் ரேசன் கார்டில் PHH_AAY என போட்டிருந்தால் நிச்சயமாக இரண்டாயிரம் ரூபாய் கிடைக்கும். அதாவது ரேசன் கடையில் 35 கிலோ அரசி வாங்குபவர்களுக்கு இந்த குறியீடு போட்டிருக்கும். இவர்களுக்கு நிச்சயம் அரசு கொடுக்கும் 2000 ரூபா கிடைக்கும். இதைப் பெற இவர்கள் தங்கள் ஆதார் எண், ரேசன் கார்டு எண், வங்கி எண் சமர்பித்தால் போதும்.

மகளிர் குழுக்கள் இந்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த ஆவணங்களோடு அவர்களை சந்தித்தால் போதும். அப்படி இல்லை என்றால் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும் இது குறித்த தகவல்கள் பெறலாம். உங்கள் கார்ட்டில் இந்த aay சிம்பிள் இருந்தால் தான் அது வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள பட்டியலில் வரும்.

அப்புறமென்ன உங்க ரேசன் கார்டை பாருங்க....இரண்டாயிரத்தை வாங்குங்க!


நண்பர்களுடன் பகிர :