ராணுவ பணியின் போது உயிர் இழந்த கணவர்... தியாகம் செய்ய தானும் ராணுவத்தில் சேர்ந்த மனைவி..! Description: ராணுவ பணியின் போது உயிர் இழந்த கணவர்... தியாகம் செய்ய தானும் ராணுவத்தில் சேர்ந்த மனைவி..!

ராணுவ பணியின் போது உயிர் இழந்த கணவர்... தியாகம் செய்ய தானும் ராணுவத்தில் சேர்ந்த மனைவி..!


ராணுவ பணியின் போது உயிர் இழந்த கணவர்...   தியாகம் செய்ய தானும் ராணுவத்தில் சேர்ந்த மனைவி..!

ராணுவ பணி என்பதே வீரம், தியாகம், தொண்டு உள்ளம் என அனைத்தும் சேர்ந்த கலவை தான். பல ராணுவ வீரர்களும் அதனால் தான் தங்கள் குடும்ப நலனை விடவும், தேச நலனை பெரிதென எண்ணி வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அந்த அவர்களைப் புரிந்துகொண்ட வாழ்க்கைத்துணையை பார்ப்பது கடினம். ஆனால் இங்கு ஒரு தம்பதி அப்படியான பெருவாழ்வு வாழ்கின்றனர்.

பணியின் போது ராணுவத்தில் தன் கணவர் இறந்துவிட, நாட்டுக்காக தன்னையும் ராணுவத்தில் சேர்க்கக்கோரி விடா முயற்சியோடு படித்து அதற்கான தகுதி பெற்றுள்ளார் ஒரு வீரப் பெண் . இந்த உருக்கமான செய்தியை தெரிந்துகொள்ள மேலே படியுங்கள்.

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த கொளரி சட்டப் பட்டதாரி. இவர் பிரசாத் மகாதிக் என்ற ராணுவ மேஜரை திருமணம் செய்திருந்தார். கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி, அருணாச்சல பிரதேசத்தில் இந்திய_சீன எல்லைப் பாதுகாப்பு படையில் ஈடுபட்டு இருந்த போது அவரது கணவர் தீ விபத்தில் உயிர் இழந்தார்.

அதன் பின்னர் நீண்ட சோகத்தில் இருந்த கொளரி, கடைசியில் தாய்நாட்டைக் காக்கும் தன் கணவரின் துறையையே தானும் தேர்ந்தெடுத்து உள்ளார். ராணுவத்தில் சேர்வதற்காக அதற்கான தகுதித்தேர்வை முதல் முறையாக எழுதினார். ஆனால் தேர்ச்சி பெறவில்லை. ஆனாலும் விடாமுயற்சியாக தொடர்ந்து எழுதி, பாஸ் ஆகியுள்ளார்.

வரும் ஏப்ரல் மாதம் சென்னையில் உள்ள ஆபீசர்ஸ் ட்ரெயினிங் அகாடமியில் பயிற்சியில் சேர உள்ள அவர் அடுத்த ஆண்டு லெப்டினண்ட் ஆக ராணுவத்தில் இணைய உள்ளார்.

இந்த வீரமங்கையின் வீரம், தியாக உணர்வுக்கு தலைவணங்குவோம் நண்பர்களே!


நண்பர்களுடன் பகிர :