தன் உயிரை துறந்து மகனைக் காப்பாற்றிய தாய் உருகவைக்கும் பாசப் பதிவு..! Description: தன் உயிரை துறந்து மகனைக் காப்பாற்றிய தாய் உருகவைக்கும் பாசப் பதிவு..!

தன் உயிரை துறந்து மகனைக் காப்பாற்றிய தாய் உருகவைக்கும் பாசப் பதிவு..!


 தன் உயிரை துறந்து மகனைக் காப்பாற்றிய தாய்     உருகவைக்கும் பாசப் பதிவு..!

அம்மா என்னும் உறவின் ஆழம் மிகப் பெரியது.அதனால் தான் நம் முன்னோர்கள் மாதா, பிதா, குரு, தெய்வம் என்னும் வரிசையில் அன்னைக்கு முதலிடம் கொடுத்தனர். அன்னை எல்லாமுமாக இருப்பவள். இங்கும் அப்படித்தான் ஒரு தாய், தன் உயிரையே கொடுத்து மகனை காப்பாற்றி உள்ளார்.

அது குறித்து தெரிந்து கொள்ள மேலே படியுங்கள்...

திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி அருகே உள்ள பொன்பாடி மேட்டுக் காலணியைச் சேர்ந்தவர் லட்சுமணன். விவசாயியான இவருக்கு ரேவதி என்ற மனைவியும், 12 வயதில் தனுஷ் என்னும் மகனும் உள்ளனர். இவர்கள் மூவரும் குடும்பத்தோடு ஒரு விசேச நிகழ்ச்சிக்கு செல்வதற்காக சென்னைக்கு போக, வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் திருத்தணி ரயில் நிலையம் வந்தனர்.

ரயில் நிலையத்தில் மனைவி, மகனை இறக்கிவிட்டு விட்டு டூவீலரை பார்க்கிங் செய்யச் சென்றார் லெட்சுமணன். அதே நேரத்தில் தண்டவாளத்தைக் கடந்து பிளாட்பாரத்துக்கு செல்ல ரேவதி, மகன் தனுஷிடன் முயன்றுள்ளார். அப்போது அதே தண்டவாளத்தில் திருவனந்தபுரம் அதி விரைவு ரயில் வந்தது. உடனே சுற்றியிருந்தவர்கள் கூச்சலிட்டனர். உடனே ரேவதி, மகன் தனுசை தூக்கி நடைமேடையில் ஏற்றி விட்டார். ஆனால் ரேவதி ஏறுவதற்குள் ரயில் அவர் உடலை சிதைந்து சென்றது. ரேவதி பரிதாபமாக உயிர் இழந்தார்.

ரயில் அசுர வேகத்தில் வருவதை ரேவதி பார்த்த போதும், தான் தப்பினால் போதும் என எண்ணவில்லை. தன் உயிரை பணயம் வைத்து மகனைக் காத்தார். கடைசியில் அதில் தன் உயிரையே பலியும் கொடுத்துள்ளார். இந்த தாயின் இந்த உருகவைக்கும் பாசத்துக்கு எதை நாம் ஈடாகச் சொல்ல முடியும்?


நண்பர்களுடன் பகிர :