உங்களுக்கு தைராய்டு பிரச்னையா? வீட்டுலயே குணமாக இதை செய்ங்க போதும்..! Description: உங்களுக்கு தைராய்டு பிரச்னையா? வீட்டுலயே குணமாக இதை செய்ங்க போதும்..!

உங்களுக்கு தைராய்டு பிரச்னையா? வீட்டுலயே குணமாக இதை செய்ங்க போதும்..!


உங்களுக்கு தைராய்டு பிரச்னையா? வீட்டுலயே குணமாக இதை செய்ங்க போதும்..!

தைராய்டு இன்று பலரும் எதிர்கொள்ளக் கூடிய முக்கிய பிரச்னைகளில் ஒன்று. அத சரிசெய்ய நீங்கள் மருத்துவரைத் தேடி ஓடுவதற்கு முன்னால் வீட்டிலேயே இதை மட்டும் செய்து பாருங்கள்.

தைராய்டு சுரப்பி குறைவாக சுரக்கும்போது தைராய்டு பிரச்னை ஏற்படுகிறது. முன் கழுத்தில் இருக்கும் தைராய்டு சுரப்பியில் போதுமான ஹார்மோன்கள் சுரக்காத போது இந்த பிரச்னை ஏற்படும். தைராய்டு ஹார்மோன் குறைந்தால் மொத்த உடல் செயல்பாட்டிலும் மாற்றம் ஏற்படும். இதனால் உடலுக்கு தேவையான சக்தியும் கிடைக்காது. அறுபது வயது தாண்டிய ஆண்களுக்கு ஹைப்போ தைட்ராய்டுக்கான வாய்ப்பு அதிகம்.

இவர்கள் வாழ்நாள் முழுக்க மாத்திரை சாப்பிட வேண்டும். எப்போதும் உடல்சோர்வு, குளிரை தாங்க முடியாமை, மலச்சிக்கல், சரும வறட்சி, குரலில் ஏற்படும் மாற்றம் ஆகியவை இதன் அறிகுறிகள். ஆனால் வீட்டில் இருக்கும் சில பொருள்களை வைத்தே தைராய்டு சுரப்பியை சரியாக வேலை செய்ய வைக்க முடியும்.

ஹைப்போ தைராய்டுக்கு பீன்ஸ் ஒரு அரிமருந்து. இது எனர்ஜிட்டிக்காக வைத்துக் கொள்ளும். காரணம் பீன்ஸில் ப்ரோட்டீன், ஆண்டி ஆக்ஸிடண்ட், கார்போஹைட்ரேட், பைபர், விட்டமின்ஸ், மினரல்ஸ் ஆகியவை உள்ளது.

இதேபோல் சீதா மரத்தின் இலைகளும் நல்ல மருந்து. சீதாமர இலைகள் அஞ்சு எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் இரண்டு தம்ளர் அளவுக்கு தண்ணீர் விட்டு, அதில் இலைகளைப் போடணும். அது அரை டம்ளர் ஆகும் வரை கொதிக்க வைக்க வேண்டும். இதை காலை, மாலை என இருவேளையும் வெறும் வயிற்றில் குடித்தால் தைராய்டு பிரச்னை சரியாகி விடும்.

இதேபோல் பால், பால் பொருள்களை தைராய்டு பாதிப்பு உள்ளவர்கள் அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் உடலுக்கு தேவையான கொழுப்பு, மைக்ரோ நியூட்ரிசியன்கள் தைராய்டை வேலை செய்யத் தூண்டும். இதே போல் பூண்டும் நல்ல பலன் தரும். அதில் இருக்கும் ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் மற்றும் சில நுண்ணுயிரிகள் தைராய்டு சுரப்பு குறைவதால் வரும் கழுத்து வீக்கத்தைத் தடுக்கும்.

இதே போல் நட்ஸ், இஞ்சி, மீன் எண்ணெய் மாத்திரை ஆகியவையும் தைராய்டை வேலை செய்யத் தூண்டும். இதேபோல் ஆப்பிள் சிடர் வினிகரும் நல்ல பலன் தரும். இது உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவும். அத்தோடு உடலில் இருக்கும் ஹார்மோன்கள் வேகமாக சுரப்பதற்கும், அவை துரிதமாக வேலை செய்யவும் உதவும். இதனால் இளஞ்சூடான நீரில் ஒரு ஸ்பூன் வினிகர் மற்றும் தேன் கலந்து குடிக்கலாம்.

பொதுவாக கொழுப்பு என்று சொல்லி பலரும் தேங்காய் எண்ணையை ஒதுக்கி விடுவார்கள். ஆனால் தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் தேங்காய் எண்ணையை சேர்த்துக் கொள்ளலாம். இதில் இருக்கு ஃபாட்டி ஆசிட் தைராய்டு சுரப்பி வேலை செய்ய உதவுவதோடு, நம் உடலின் மெட்டபாலிசத்தையும் அதிகரித்து சுறுசுறுப்பு ஆக்கும். இதையெல்லாம் செஞ்சு பாருங்க...அசந்துடுவீங்க!


நண்பர்களுடன் பகிர :