அட்ராசக்கை...இப்படியும் ஒரு போலீஸ்... படிச்சு பாருங்க...சிலிர்த்து போயிடுவீங்க... Description: அட்ராசக்கை...இப்படியும் ஒரு போலீஸ்... படிச்சு பாருங்க...சிலிர்த்து போயிடுவீங்க...

அட்ராசக்கை...இப்படியும் ஒரு போலீஸ்... படிச்சு பாருங்க...சிலிர்த்து போயிடுவீங்க...


அட்ராசக்கை...இப்படியும் ஒரு போலீஸ்...   படிச்சு பாருங்க...சிலிர்த்து போயிடுவீங்க...

நம்மூரு சாலைகளில் ஆங்காங்கே நின்று கொண்டு ஹெல்மெட் பிடிக்கும் காவலர்களை நாம் நம்மையும் அறியாமல் திட்டுவோம். பின்னே வேகமாக சென்று கொண்டிருக்கும் போது, ஏதோ கொலைக் குற்றவாளியை பிடிப்பது போல் சாலையில் எங்கோ இருந்து திடுதிப்பென்று பாயும் இவர்களால் அதிக அளவு விபத்துகள் ஏற்படுவதும் நாம் அறிந்ததே...

ஆனால் இப்படியான போலீஸாருக்கு மத்தியில், இங்கு ஒரு போலீஸ் அதிகாரி செய்த செயல் அவரை ஒரே நாளில் பொதுமக்கள் மத்தியில் ஹீரோ ஆக்கியுள்ளது. இவருக்கு அரசு விருது கொடுத்து பாராட்ட வேண்டும் என பொதுமக்களே கோரிக்கை வைக்கத் துவங்கியுள்ளனர். அப்படி இந்த போலீஸ்க்காரர் என்ன செய்தார்? அது குறித்து தெரிந்துகொள்ள மேலே படியுங்கள்.

மத்தியபிரதேச மாநிலத்தின் ராபன்பிபால்கான் என்ற ஊருக்கு அருகில் ஒரு வாலிபர் அவர் சென்ற ரயிலில் இருந்து தவறி விழுந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற காவலர் பூனம் பில்லூர் வாலிபரைப் பார்த்தார். சுற்றும், முற்றும் பார்த்த போது அந்த பகுதியில் சாலைவசதியே இல்லாமல் இருந்தது தெரிய வந்தது.

உடனே காவலர் செய்தது தான் இன்று அவரை பலரும் புகழ காரணம். ரயில்வே தண்டவாளத்தின் ஊடே ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்துக்கு காயம் அடைந்த வாலிபரை தோளில் தூக்கிக் கொண்டே ஓடிப் போய் மருத்துவமனையில் சேர்த்தார். இந்த ஒன்றரை கிலோ மீட்டரில் அவர் ஒரு நொடி கூட ஓய்வுக்காக நிற்கவில்லை. அவர் காயம்பட்ட வாலிபரை தூக்கிக் கொண்டு ஓடும் வீடீயோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதை நீங்களும் கீழே வீடீயோ கொடுக்கப்பட்டுள்ளது. பாருங்களேன்.


நண்பர்களுடன் பகிர :