மகாத்மா காந்தி ஏன் நிலக்கடலையை விரும்பி சாப்பிட்டார் தெரியுமா? இதயவாழ்வை காத்து நீண்டவாழ்வுக்கு அடித்தளமிடும் நிலக்கடலை..! Description: மகாத்மா காந்தி ஏன் நிலக்கடலையை விரும்பி சாப்பிட்டார் தெரியுமா? இதயவாழ்வை காத்து நீண்டவாழ்வுக்கு அடித்தளமிடும் நிலக்கடலை..!

மகாத்மா காந்தி ஏன் நிலக்கடலையை விரும்பி சாப்பிட்டார் தெரியுமா? இதயவாழ்வை காத்து நீண்டவாழ்வுக்கு அடித்தளமிடும் நிலக்கடலை..!


மகாத்மா  காந்தி ஏன் நிலக்கடலையை விரும்பி சாப்பிட்டார் தெரியுமா?   இதயவாழ்வை காத்து நீண்டவாழ்வுக்கு அடித்தளமிடும் நிலக்கடலை..!

மகாத்மா காந்தியடிகள் தொடர்பான வரலாற்றை படித்துப் பார்த்தால் காந்தி தான் வரலாற்று நாயகர்களிலேயே அதிக தூரம் நடந்தவர். அதேபோல் அவர் மாமிச உணவுகளை மறுத்தவர். கூடவே நிலக்கடலையை தன் முக்கிய உணவாக தகவமைத்துக் கொண்டவர். காந்தி ஏன் நிலக்கடலையை அவ்வளவு நேசித்தார் தெரியுமா? காரணம் அதன் சத்துக்களும், பலன்களும் தான்!

நிலக்கடலை பெரிய விலையெல்லாம் கிடையாது. மிகச்சாதாரணமாக பாமரரும் வாங்கிச் சாப்பிடும் விலை தான். இதனாலேயே நிலக்கடலையை ஏழைகளின் பாதாம் என்றும் சொல்வார்கள். தொடர்ந்து நிலக்கடலை சாப்பிடுபவர்களுக்கு இதயநோய் பாதிப்பு வரும் வாய்ப்பு குறைவு. இதில் உள்ள கொழுப்பு சத்தான அன்சேச்சுரேட், ஓலிக் அமிலம், ஆண்டி ஆக்சிடண்ட் ஆகியவை இதய வாழ்வுகளை பாதுகாக்கிறது. வாரத்தில் நான்கு நாள்கள் நிலக்கடலை சாப்பிட்டாலே உங்கள் இதயம் உறுதியாகிடும்.

இதேபோல் நிலக்கடலையில் மாங்கனீஸ் அதிக அளவில் உள்ளது. மாங்கனீஸானது மாவுச்சத்து, கொழுப்புகளின் மாற்றத்தில் முக்கியப்பங்கு வகிக்கிறது. இதனால் நாம் உண்ணும் உணவில் நமக்கு கால்சியம் கிடைக்கவும் வகை செய்யும். பெண்கள் தொடர்ந்து நிலக்கடலை சாப்பிட்டால் எழும்பு சம்பந்தமான சிக்கல்களில் இருந்து தப்பி விடலாம்.

தினமும் 30 கிராம் நிலக்கடலை சாப்பிட்டு வந்தால் பித்தப்பையில் கல் உருவாவதைத் தடுக்க முடியும். உடல் பயிற்சி செய்பவர்களுக்கு நிலக்கடலை நல்ல சத்தான எனர்ஜி சைட்டிஷாக இருக்கும். நிலக்கடலையில் அதிக அளவு கொழுப்பு உள்ளது. ஆனால் அவை அனைத்தும் நன்மை செய்யும் கொழுப்புகள். இன்னும் சொல்லப்போனால் நிலக்கடலையில் உள்ள தாமிரச்சத்து நம் உடலில் உள்ள எல்.டி.எல் எனப்படும் கெட்ட கொழுப்பைக் குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகரிக்கிறது.

நிலக்கடலையில் உள்ள வைட்டமின் பி3 மூளையின் செயல்திறனைத் தூண்டி நினைவாற்றலையும் அதிகரிக்கிறது. நிலக்கடலையில் அதிக அளவு புரதச்சத்து உள்ளது. கூடவே இரும்புச்சத்து, துத்தநாகம், மெக்னீசியம், வைட்டமின் டி ஆகியவையும் உள்ளது. உடலில் புரதச்சத்து அதிகம் தேவைப்படுபவர்களுக்கு நிலக்கடலை நல்ல எனர்ஜி டானிக். மாமிசங்களில் புரதம் இருக்கிறது. அதை தவிர்ப்பவர்கள் நிலக்கடலையை சாப்பிட்டலாம். இப்போது தெரிகிறதா காந்தி ஏன் அதிக அளவு நிலக்கடலை சாப்பிட்டார் என்று?


நண்பர்களுடன் பகிர :