குட்டிப் பாப்பாவை காப்பாற்றிய யானை ராமநாராயணன் திரைப்பட பாணியில் ஆச்சர்ய சம்பவம்..! Description: குட்டிப் பாப்பாவை காப்பாற்றிய யானை ராமநாராயணன் திரைப்பட பாணியில் ஆச்சர்ய சம்பவம்..!

குட்டிப் பாப்பாவை காப்பாற்றிய யானை ராமநாராயணன் திரைப்பட பாணியில் ஆச்சர்ய சம்பவம்..!


குட்டிப் பாப்பாவை காப்பாற்றிய யானை ராமநாராயணன் திரைப்பட பாணியில் ஆச்சர்ய சம்பவம்..!

மனிதர்களை விட மென்மையும், பாசமும் கொண்டவை மிருகங்கள். அதை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு சம்பவம் மேற்கு வங்கத்தில் நடந்துள்ளது.

பொதுவாகவே மிருகங்கள் மூர்க்க குணம் கொண்டவை என்றே நாம் சொல்லி வழக்கப்பட்டு உள்ளோம். ஆனால் அவைகளை நாம் தொந்தரவு செய்யாதவரை, அவை நம்மிடம் அன்பு மழை பொழியக் கூடியவை தான். தமிழில் பிரபல திரைப்பட இயக்குநர் ராமநாராயணனின் பல படங்களிலும் நாய், குரங்கு, ஏன் பாம்பு கூட குழந்தைகளுக்கு உதவுவது போல் காட்சிகள் வரும்.

ஹாலிவுட்டிலும் ஒரு பெண்ணின் மீது கிங்காங் பாசம் காட்டுவதும், ஜங்கிள்புக் சீரியலில் குழந்தை காட்டுக்குள் வளர்வதையும், மிருகங்கள் அதனுடன் நேசம் காட்டுவதையும் நாம் பார்த்திருப்போம். அப்படி திரையில் அல்ல, நிஜத்திலேயே ஒரு நான்கு வயது குழந்தையை யானை ஒன்று காப்பாற்றி உள்ளது.

மேற்கு வங்க மாநிலம், லடாகுரி பகுதியைச் சேர்ந்தவர் நிதுகோஷ். இவரின் மனைவி டிட்லி. இந்த தம்பதிகளின் நான்கு வயது மகள் அஹானா. இவர்கள் இருவரும் வனப்பகுதியில் உள்ள கோயில் ஒன்றுக்கு சென்று கொண்டிருந்த போது, வழியில் காட்டு யானைக் கூட்டம் ஒன்று வந்துள்ளது.

அந்த வழியாக வந்த அனைத்து வாகனங்களும் நிறுத்திவிட்டு அந்த காட்சியை பார்த்து கொண்டு இருந்தனர்.

அந்த யானைக் கூட்டம் சென்றதும் நிதுகோஷ் தன் பைக்கை ஸ்டார்ட் செய்தார். அப்போது மீண்டும் இன்னொரு காட்டு யானைக் கூட்டம் சாலையைக் கடந்தது. இதை சற்றும் எதிர்பார்க்காத நிதுகோஷ் பிரேக் பிடித்து வண்டியை நிறுத்தினார். இதில் அவரது மனைவி, குழந்தை சாலையில் தவறி விழுந்தனர். அப்போது அந்த கூட்டத்தில் இருந்த ஒரு யாமை தனது நான்கு கால்களின் நடுவே அந்த குழந்தையை வைத்து, மற்ற யானைகள் குழந்தைகளின் அருகில் வராமல் தடுத்துள்ளது.

இப்படி மொத்த யானைகளும் சென்ற பின்னர் கடைசியாக தன் காலை அடி மேல் அடி வைத்து நகர்த்தி குழந்தையை பாதுகாப்பாக கடந்து சென்றுள்ளது.

ராமநாராயணன் சார் படத்துல காட்டுனது ஒன்னும் பொய்யில்லை போல இருக்கே?


நண்பர்களுடன் பகிர :