அடேங்கப்பா வசம்புக்கு இத்தனை மருத்துவ குணங்களா? விஷம் குடித்தவரையும் பிழைக்கச்செய்யும் அருமருந்து..! Description: அடேங்கப்பா வசம்புக்கு இத்தனை மருத்துவ குணங்களா? விஷம் குடித்தவரையும் பிழைக்கச்செய்யும் அருமருந்து..!

அடேங்கப்பா வசம்புக்கு இத்தனை மருத்துவ குணங்களா? விஷம் குடித்தவரையும் பிழைக்கச்செய்யும் அருமருந்து..!


அடேங்கப்பா வசம்புக்கு இத்தனை மருத்துவ குணங்களா? விஷம் குடித்தவரையும் பிழைக்கச்செய்யும் அருமருந்து..!

என்னதான் அலோபதி மருந்துகள் பெருகி விட்டாலும் நம் பாரம்பர்யத்துக்கு அவை ஈடு ஆகாது. அலோபதி மருந்துகள் சைட் எபெக்ட் என அழைக்கப்படும் பக்க விளைவுகளையும் ஏற்படுத்தக் கூடியவை. அதனால் தான் சர்க்கரை நோ, இரத்த அழுத்ததுக்கு மருந்துகள் எடுக்கும் போது கூட அலோபதி மருத்துவர்கள் வைட்டமின் மாத்திரைகளையும் கூடவே தருவார்கள்.

ஆனால் நம் பாரம்பர்ய மருத்துவ முறையில் உடலுக்கு கேடு தரும் இதுபோன்ற எந்த சிக்கல்களும் இல்லை. அதில் முக்கிய பங்கு வகிப்பது வசம்பு. பிறந்த குழந்தைக்கு கூட நம் முன்னோர்கள் தினசரி வசம்பை உரசி நாக்கில் வைப்பதை பார்த்திருப்போம். காரணம் குழந்தை சாப்பிடும் உணவில் அலர்ஜி, விசத்தன்மை இருந்தால் அதை வசம்பு முறியடித்துவிடும்.

வசம்பைக் கூட இயற்கையான முறையில் பூச்சிக்கொல்லி மருந்து தயாரித்தும் விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். வசம்புக்கு விசத்தை முறிக்கும் தன்மையும் உண்டு. விஷம் குடித்தவர்களுக்கு உடனே வசம்பை அரைத்து, ஜூஸ் போன்று மூன்று டீஸ்பூன் கொடுத்தால் உள்ளே இருக்கும் விஷம் முழுக்க வெளியே வந்துவிடும்.

சோம்பலைப் போக்கி பசியைத் தூண்டுவதிலும் வசம்பு முக்கியப்பங்கு வகிக்கின்றது. அகோரஸ் காலமஸ் என்ற அறிவியல் பெயர் கொண்ட இது, ஆங்கிலத்தில் ஸ்வீட் ஃபிளாக் என அழைக்கப்படுகிறது. இந்த வசம்போடு சுடுதண்ணீர், கருவேப்பிலை, மஞ்சள் தூள் கலந்து கிருமிநாசினியாகவும் பயன்படுத்தலாம்.

இதேபோல் காய்ந்த வசம்பைசூடுபடுத்தி குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு பசியின்மை, சின்ன, சின்ன தொற்றுநோய்களும் வராமல் தடுக்கப்படுகிறது. இதனாலேயே இது ‘பிள்ளை வளர்ப்பான்’ எனவும் கிராமப் பகுதிகளில் அழைக்கப்படுகிறது.

இனி உங்க வீட்டிலும் எப்போதும் இருக்கட்டும் இந்த வசம்பு!


நண்பர்களுடன் பகிர :