வினோதமாக விளம்பரம் எழுதிய இட உரிமையாளர்... Description: வினோதமாக விளம்பரம் எழுதிய இட உரிமையாளர்...

வினோதமாக விளம்பரம் எழுதிய இட உரிமையாளர்...


வினோதமாக விளம்பரம் எழுதிய இட உரிமையாளர்...

இந்த உலகம் பல வினோதமான விசயங்களால் சூழப்பட்டது. நம்மைச் சுற்றிலும் பல விசயங்கள் சீரியஸாகவே நடந்தாலும், காமெடியாக நமக்குத் தெரியும். இங்கேயும் இப்படித்தான் ஓனர் ஒருவர் சீரியஸாக ஒருவிசயத்தை எழுத, அது கடைசியில் காமெடியில் முடிந்து போனது.

பல வீட்டு ஓனர்கள் தங்கள் வீட்டில் நாய் வளர்ப்பதையும், அதுகுறித்து தெரியாமல் யாரும் வந்து கடிபட்டு விடக்கூடாது என்னும் முன்னெச்சரிக்கையுடனும் ‘’நாய்கள் ஜாக்கிரதை’’என பதாகை வைத்திருப்பார்கள். அது அந்த வீட்டில் நாய்கள் இருக்கிறது என அங்குவரும் மக்களுக்கு சொல்லும் செய்தி. இதேபோல் சமூகவளைதலங்களில் கடந்த இரு தினங்களாக முருங்கைக்காய் மரத்தை வீட்டில் வளர்க்கும் ஒருவரின் பதாகை டிரெண்டாகி வருகிறது.

அதில் கிளையை ஒடிக்காமல் பறிக்கவும், இரண்டு காய்களுக்கு மேல் திருடக் கூடாது எனவும் போட்டது வைரலானது. அதே போன்று இப்போது இன்னொரு சுவர் விளம்பரமும் அனைவராலும் கவனிக்கப்பட்டு வருகிறது. அதில் அந்த காம்பவுண்ட் உரிமையாளர் ஆடு, மாடு உள்ளே போகக் கூடாது என எழுதி வைத்துள்ளார்.

இதை வாசித்து பார்த்துவிட்டு ஆடு, மாடு உள்ளே செல்லாமல் இருக்குமா? என இணையத்தில் நெட்டிசன்கள் இதை வைத்து செய்கின்றனர். இன்னொரு புறத்தில் இது மேய்ச்சலுக்கு ஆடு, மாடுகளை அழைத்து வருபவர்க ளுக்காக எழுதப்பட்டு இருக்கும் விளம்பரம் என்றும் சொல்லப்படுகிறது. இரண்டில் எது சரி என்று நீங்களும் கருத்திடுங்களேன் நண்பர்களே...


நண்பர்களுடன் பகிர :