டு லெட் படம் எப்படி இருக்கு? மாற்று சினிமாவுக்கான முயற்சி..! Description: டு லெட் படம் எப்படி இருக்கு? மாற்று சினிமாவுக்கான முயற்சி..!

டு லெட் படம் எப்படி இருக்கு? மாற்று சினிமாவுக்கான முயற்சி..!


டு லெட் படம் எப்படி இருக்கு? மாற்று சினிமாவுக்கான முயற்சி..!

இந்திய அளவில் தேசிய திரைப்பட விருது, பல்வேறு சர்வதேச நாடுகளின் விருதினைப் பெற்ற படம் ‘டு லெட்’ இப்படம் இப்போது திரையரங்கிற்கு வந்துள்ளது.

குடும்பத் தலைவன், தலைவி, அவர்களின் ஒரே செல்ல மகன் என மூவரை மட்டுமே மையப்படுத்தி சுற்றிச் சுழல்கிறது படம். இவர்கள் வசிக்கும் வாடகை வீட்டை வீட்டின் உரிமையாளர் காலி செய்யச் சொல்கிறார். அதன் பின்னர் வீடு தேடி இவர்கள் குடும்பமாக அலைவது தான் கதை. 2007ம் ஆண்டில் சென்னையில் நிறைய ஐ.டி கம்பெனிகள் வருகின்றன. இங்கெல்லாம் வேலை செய்ய மொத்தத் தமிழகத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான பொறியியல் பட்டதாரிகள் சென்னைக்கு வருகின்றனர்.

இவர்களுக்கு இந்த மென்பொருள் நிறுவனம் அதிக சம்பளமும் கொடுப்பதால் வீடுகளின் வாடகையும் உச்சத்தில் போகிறது. அந்த வாடகைக்கு பொறியியல் படித்துவிட்டு, சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்பவர்களுக்கு வீடு கொடுக்கும் ஹவுஸ் ஓனர்கள், அதே சென்னையில் நீண்டகாலமாய் வாழ்ந்த அடிமட்ட மக்களைப் பற்றி யோசிக்காமல் விட்டுவிடுகின்றனர். இதனால் இந்த அடிமட்ட மக்கள் வீடு தேடி அலைவது தான் படத்தின் கதை.

அன்றாட சென்னை மக்கள் சந்திக்கும் துயர்த்தை அப்படியே காட்சிபடுத்தி இருக்கிறார் செழியன். படத்தில் பாட்டு, காமெடி எதுவும் கிடையாது. ஆனால் முழுக்க, முழுக்க எமோசனல் மற்றும் செண்டிமெண்ட் காட்சிகள் நிறைந்து உள்ளது. தேசிய விருது பெற்ற கலையை முக்கியமாக்க் கொண்ட டு லெட் மாற்று சினிமாவுக்கான முயற்சி. எனவே மிஸ் பண்ணாம பார்த்துடுங்க...


நண்பர்களுடன் பகிர :