இப்படியும் ஒரு சலூன் கடைக்காரர்... இவரை பாராட்டலாமே நண்பர்களே.... Description: இப்படியும் ஒரு சலூன் கடைக்காரர்... இவரை பாராட்டலாமே நண்பர்களே....

இப்படியும் ஒரு சலூன் கடைக்காரர்... இவரை பாராட்டலாமே நண்பர்களே....


இப்படியும் ஒரு சலூன் கடைக்காரர்...  இவரை பாராட்டலாமே நண்பர்களே....

நூல்களை அறிவின் குழந்தைகள் என்றே சொல்லலாம். இந்த நூல்களை நேரத்திற்கு உரிய நூல்கள், எக்காலத்துக்கும் உரிய நூல்கள் என இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

தினசரி பத்திரிகைகள், வாரந்திர ஏடுகள் ஆகியவற்றை நேரத்திற்கு உரிய நூல்கள் என்றும், நாவல்கள், இலக்கியங்கள், வரலாற்று நூல்களை எக்காலத்திற்கும் உரிய நூல்கள் என்றும் பிரிக்கலாம். இந்த இருவகையான நூல்களும் ஒரு சலூன் கடையில் நிரம்பி உள்ளது என்றால் அது ஆச்சர்யம் தானே?

தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் உள்ளது மாரியப்பனின் சலூன் கடை. வழக்கமாகவே முடி திருத்தும் கடைகளில் தினசரி நாளிதழ்கள் எல்லாமே வருவது வாடிக்கை தான். மாரியப்பன் அதில் இருந்தும் ஒருபடி மேலே போய் சங்க இலக்கியங்கள், ஐம்பெரும் காப்பியங்கள், இந்திய சுதந்திர போராட்ட வரலாறு, நவீன புதினங்கள், கவிதை, சிறுகதைத் தொகுப்புக்கள் என அந்த முடி திருத்தகத்தில் நிரம்பி உள்ளன.

இந்த முடிதிருத்தகத்துக்கு வருபவர்கள் இலக்கியம் வாசிக்கும் வாய்ப்பை பெறுகின்றனர். முடிவெட்ட வரும் அந்த குறைவான நேரத்தில் இலக்கியத்தை ஆழமாக வாசித்து விட முடியாது தான், அதேநேரம் அவர்களுக்கு வாசிப்பு பழக்கத்தை தூண்டிவிட முடியும் என்கிறார் மாரியப்பன்.

அதேபோல் மாரியப்பன் சலூன் கடையில் எப்போதும் சட்டையை இன் செய்து, பெல்ட் கட்டி பக்கா ஆபீசர் போல் இருக்கிறார். செய்யும் தொழிலுக்கு முழு மரியாதைக் கொடுக்க வேண்டும், அதை நேசித்து செய்ய வேண்டும் என்பதால் தான் இப்படி லுக்கில் இருக்கிறார் மாரியப்பன்.

ஆளான பட்ட அரசன் கூட குனியனும்...இங்க வந்தா குனியனும்...முடி வளர, வளர வண்ணம் செய்ய குனியனும் என சலூன் கடை குறித்து பிரசித்தி பெற்ற ஒரு தமிழ்த் திரைப்பட பாடல் ஒன்று உண்டு. மாரியப்பன் கடையில் முடி வெட்டுபவர் மட்டுமல்ல...கடைக்கு வரும் அனைவருமே குனிந்தே தான் உள்ளனர். புத்தகத்தை சுவாசிக்கும் பழக்கத்தால்!


நண்பர்களுடன் பகிர :