படிப்புக்கு நடுவே பாரம்பர்யத்தை விற்கும் சிறுவன்... திருச்சி போனா இவன் கடையை மிஸ் பண்ணாதீங்க..! Description: படிப்புக்கு நடுவே பாரம்பர்யத்தை விற்கும் சிறுவன்... திருச்சி போனா இவன் கடையை மிஸ் பண்ணாதீங்க..!

படிப்புக்கு நடுவே பாரம்பர்யத்தை விற்கும் சிறுவன்... திருச்சி போனா இவன் கடையை மிஸ் பண்ணாதீங்க..!


படிப்புக்கு நடுவே பாரம்பர்யத்தை விற்கும் சிறுவன்...    திருச்சி போனா இவன் கடையை மிஸ் பண்ணாதீங்க..!

பாரம்பர்யத்தை எப்படி விக்க முடியும்? என படித்தவுடன் டரியல் ஆகி விடாதீர்கள். தொடர்ந்து தெரிந்துகொள்ள மேலே படியுங்கள்

இன்று நாம் நாகரீகம் என்னும் பெயரில் பலவற்றையும் இழந்து விட்டோம். அதில் முக்கியமானது நம்மிடம் இருந்த பாரம்பர்யமான உணவுகள். அன்றைக்கு நம் முன்னோர்கள் சாப்பிட்ட உணவுகள் மிகவும் ஆரோக்கியமானதாக இருந்தவை.

ஆனால் இன்று பீட்சா, பர்கர்...அது, இது என வாயில் நுழையாத (சாப்பிட அல்ல...பெயர் உச்சரிக்க வாயில் நுழையாத)எதையெல்லாமோ நாம் சாப்பிடத் துவங்கி விட்டோம். அதன் எதிர்விளைவாக நாம் நம் ஆரோக்கியத்தையும் இழந்து வருகிறோம். முப்பது வயதிலேயே சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்படவும் இன்றைய உணவுமுறைகள் தான் காரணம்.

இப்படியான சூழலில் திருச்சி காட்டூர், கைலாஸ்நகர் பகுதியைச் சேர்ந்த அன்புராஜா என்ற மாணவன் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் படித்துக் கொண்டே மாலையில் பாரம்பர்யமான உணவுகளை விற்கிறார்.

பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக அதில், முழுக்க இயற்கை வழியில் எவர்சில்வர் பாத்திரத்திலும், தூக்கு வாளியிலுமாக பொருள்களை விற்கிறார்.

தினமும் பள்ளிவிட்டு வந்ததும், விடுமுறைநாள்களிலும் அன்புராஜாவின் கடை பிறந்து விடுகிறது. அதில் பாரம்பர்யமான உணவுகளை வாங்கிச் சாப்பிட்டு மகிழ பெரும் கூட்டமும் கூடி விடுகிறது.

அன்புராஜாவின் கடையில், ‘’வல்லாரை சூப், திணை அரிசிப் பாயாசம், வெல்லத்தினால் செய்த இயற்கை போளி, கொண்டை கடலை சுண்டல், கம்பு பணியாரம், மொச்சைப் பயிறு, வாழை இலை கொழுக்கட்டை ஆகியவை கிடைக்கிறது. இதுகுறித்து அப்பகுதியில் சாப்பிட போன ஒருவர் சமூக வளைதளத்தில் போட, அது இப்போது வைரலாகி வருகிறது.

வீடீயோவை கீழே பாருங்கள்...திருச்சிப் பக்கம் போனா அந்த அன்புராஜாவின் பாரம்பர்ய உணவையும் மிஸ் செஞ்சிடாதீங்க...நண்பர்களுடன் பகிர :