கர்ப்பிணி சர்வருக்கு அடித்த ஜாக்பாட்: டிப்ஸ் தொகையை கேட்டா ‘ஷாக்’ ஆகிடுவீங்க... Description: கர்ப்பிணி சர்வருக்கு அடித்த ஜாக்பாட்: டிப்ஸ் தொகையை கேட்டா ‘ஷாக்’ ஆகிடுவீங்க...

கர்ப்பிணி சர்வருக்கு அடித்த ஜாக்பாட்: டிப்ஸ் தொகையை கேட்டா ‘ஷாக்’ ஆகிடுவீங்க...


கர்ப்பிணி சர்வருக்கு அடித்த ஜாக்பாட்: டிப்ஸ் தொகையை கேட்டா ‘ஷாக்’ ஆகிடுவீங்க...

உணவகங்களில் சாப்பிட்டு விட்டு இன்முகத்தோடு நமக்குப் பரிமாறிய சர்வருக்கு ஒரு சின்னத் தொகையை டிப்ஸாகக் கொடுப்பது நம்மில் பலருக்கும் வழக்கம். அப்படி ஒரு போலீஸ்காரர் ஹோட்டலில் தனக்கு உணவு பரிமாறிய கர்ப்பினி பெண் ஒருவருக்கு டிப்ஸ் கொடுத்தது அமெரிக்காவில் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவில் தெற்கு ஜேர்சியில் இருக்கிறது அந்த தனியார் உணவகம். இங்கு ‘கோர்ட்னே’ என்ற பெண் சர்வராக வேலை செய்து வந்தார். அந்த உணவகத்துக்கு காவலர் ஒருவர் சாப்பிட வந்தார். வழக்கமாக டேபிளில் இருப்பவர்களை கவனிப்பது போல் கோர்ட்னே அந்த போலீஸ்காரரையும் கவனித்து அன்பொழுக உணவு பரிமாறினார்.

அப்போது கோர்ட்னேவின் வயிற்றைக் கவனித்தார் அந்த போலீஸ்காரர்.அவர் ஏழு மாதங்கள் கர்ப்பமாய் இருந்தார். கர்ப்பிணி பெண் இப்படி கஷ்டப்பட்டு பரிமாறுகிறாரே என அவருக்கு இரக்கம் வந்தது. அப்போது பில்லைக் கொண்டு வந்து வைத்து விட்டு நகர்ந்து சென்றார் கர்ப்பிணி பெண். இதனிடையில் அந்த கர்ப்பிணி பெண்ணின் நிலை குறித்து ஹோட்டல் உரிமையாளரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார் போலீஸ்காரர்.

அப்போது இதுதான் அந்த பெண்ணுக்கு முதல் பிரசவம் என்றும், வறுமையான குடும்ப சூழல் காரணமாக வேலைக்கு வந்ததாகவும் ஹோட்டல் உரிமையாளர் சொன்னார். உடனே தன் ஹோட்டல் பில்லான 8.75 டாலருடன், 100 டாலர் சர்வருக்கு டிப்ஸாக கொடுத்தார். இது இந்திய மதிப்பில் 17958 ரூபாய். இவ்வளவு பெரிய தொகையை கொடுத்தாலும் அதை அந்த கர்ப்பிணி பெண்ணுக்குக் கூட சொல்லாமல் நகர்ந்து விட்டார்.

போலீஸ்காரர் சென்ற பின்னர் கர்ப்பிணி சர்வர் பெண் ’கோர்ட்னே’ வை அழைத்த ஹோட்டல் நிர்வாகம் அவருக்கு இந்த தொகையை கொடுக்க அவர் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனார்.

போலீஸ்காரர் டிப்ஸோடு சேர்த்து வெள்ளைத்தாளில் ஒரு குறிப்பும் எழுதிக்கொடுத்து இருந்தார். அதில் ‘’முதல் குழந்தையை கொண்டாடுங்கள். உங்களுக்கு இது மிகவும் சந்தோஷமான தருணம்’’ என குறிப்பிட்டு இருந்தார். வீட்டுக்கு இதைக் கொண்டு போன அந்த கர்ப்பிணி பெண் தன் தந்தையிடம் நடந்தவற்றைச் சொல்ல, அவர் இதை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.


நண்பர்களுடன் பகிர :