மைதானத்தில் ராக்கெட் மழை பொழிந்த கெயில்... ஒரே மேட்சில் இவர் தொலைத்த பந்துகள் எத்தனை தெரியுமா? Description: மைதானத்தில் ராக்கெட் மழை பொழிந்த கெயில்... ஒரே மேட்சில் இவர் தொலைத்த பந்துகள் எத்தனை தெரியுமா?

மைதானத்தில் ராக்கெட் மழை பொழிந்த கெயில்... ஒரே மேட்சில் இவர் தொலைத்த பந்துகள் எத்தனை தெரியுமா?


மைதானத்தில் ராக்கெட் மழை பொழிந்த கெயில்...    ஒரே மேட்சில் இவர் தொலைத்த பந்துகள் எத்தனை தெரியுமா?

மேற்கு இந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இங்கிலாந்து அணி, அந்த அணிக்கு எதிராக கிரிக்கெட் தொடரிலும் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான் முதல் ஒருநாள் போட்டி பார்படாஸில் நடந்தது.

பரபரப்பு, விறுவிறுப்புகளுக்கு துளியும் பஞ்சம் இல்லாமல் இருந்தது இந்த மேட்ச். இதில் டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி பேட்டிங்கையே தேர்வு செய்தது. அந்த அணியில் நட்சத்திர ஆட்டக்காரர் கெயிலும் ஆடினார். அவர் ஓராண்டுக்கு பின்னர் ஆடிய ஒருநாள் போட்டி இது.

ஆரம்பத்தில் மிக நிதானமாகவே தனது ஆட்டைத் துவங்கிய கெயில் ஒருகட்டடத்தில் தன் சூறாவளி ஆட்டத்தால் இங்கிலாந்து பந்து வீச்சாளர்களை திணறவைத்தார், இந்த மேட்சில் கெயில் சதமும் அடித்தார்.

இதில் அவர் மொத்தம் 12 சிக்ஸர்களை அடித்தார். அதில் ஆறு சிக்ஸர்கள் மைதானத்துக்கு வெளியே பறந்து, பந்துகள் தொலைந்து போனது. இதனால் அம்பயர்கள் அடிக்கடி பந்தையும் மாற்றிக் கொண்டே இருந்தனர். இஸ்ரோ மட்டுமல்ல எங்க கெயிலும் ராக்கெட் விடுவார் என அவரது சிக்ஸர்கள் தந்த மகிழ்ச்சியில் கிரிக்கெட் பிரியர்கள் இதை கொண்டாடுகின்றனர்.

வீடீயோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது...


நண்பர்களுடன் பகிர :