தமிழ் மொழியை கொண்டாடுவோம் வாருங்கள்... இன்று உலக தாய்மொழி தினம்..! Description: தமிழ் மொழியை கொண்டாடுவோம் வாருங்கள்... இன்று உலக தாய்மொழி தினம்..!

தமிழ் மொழியை கொண்டாடுவோம் வாருங்கள்... இன்று உலக தாய்மொழி தினம்..!


தமிழ் மொழியை கொண்டாடுவோம் வாருங்கள்...  இன்று உலக தாய்மொழி தினம்..!

உலகம் முழுவதும் இன்று தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் நாம் இன்று தமிழ் மொழியை மிகச்சிறப்பாக கொண்டாட வேண்டும்.

ஒரு மனிதன் தன் கருத்தை பிறருக்குத் தெரிவிக்க மொழியே ஆயுதமாக இருக்கிறது. மொழி என்கின்ற ஒன்று இல்லாவிட்டால் மனிதன் தன் எண்ணங்களை கடத்துவதும் மிகுந்த சிக்கலான விசயமாக இருந்திருக்கும். ஜய்க்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பானது உலகில் அனைத்து மொழிகளையும் காக்க வேண்டும் என்னும் உயரிய நோக்கத்தோடு உலக தாய்மொழி தினத்தை துவங்கியது. கடந்த 2000வது ஆண்டு முதல் இது தொடர்ந்து கொண்டாடப்பட்டும் வருகிறது.

யுனெஸ்கோ நிறுவனத்தின் ஆய்வின் படி உலகில் 6000 மொழிகள் உள்ளன. இவற்றில் 40 சதவிகித மொழிகள் அழிந்து வருகின்றன. உதாரணத்துக்கு நம் தமிழ் மொழிய எடுத்துக் கொண்டால், இன்று அனைவருமே தங்கள் குழந்தைகளை ஆங்கில வழிக் கல்விக் கூடத்தில் சேர்க்கத் தான் விரும்புகிறார்கள். தமிழ் தெரியாத ஒரு தலைமுறை குழந்தைகள் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். குழந்தைகள் தங்களை அம்மா என்று அழைப்பதை விட மம்மி என்று அழைப்பதைத் தான் பெற்றோர்களும் விரும்புகின்றனர்.

இதனால் எல்லாம் நம் தமிழ் மொழி மெல்ல, மெல்ல நசுக்கப்பட்டு வருகிறது. இந்திய அரசால் செம்மொழி என அங்கீகரிப்பட்ட கலாச்சார, பாரம்பர்ய பெருமையுடைய நம் தமிழ் மொழி இன்று தமிழ்க்குடும்பத்தில் பிறந்த பலரும் பேசாத மொழியாகி வருகிறது. காரணம் ஆங்கில மோகம். நுனி நாக்கு ஆங்கிலத்தில் பேசுவது தான் அழகு என நினைக்கும் பெற்றோர்கள் ஆங்கிலம் என்பது மொழி தானே ஒழிய, அறிவு அல்ல என புரிந்து கொள்வதில்லை.

ஒரு குழந்தைக்கு தாய்மொழியில் தான் அதன் கற்பனை வளம் அதிகரிக்கும். தாய்மொழி தான் சிந்திக்கத் தூண்டி, சாதிக்க பாதை காட்டும். எத்தனை மொழிகளையும் கற்று வையுங்கள். ஆனால் தாய் மொழியின் மீது பற்று வையுங்கள். அந்த வகையில் உலக தாய்மொழி தினத்தில் நாம் பேசும், நம்மை இணைக்கும் தமிழ் மொழியையும், அதன் வளத்தையும் நினைவு கூறுவோம்.

அன்னைத் தமிழுக்கு வணக்கம் செலுத்துவோம். சிந்தனையால் அதற்கு சிறப்பு செய்வோம். .


நண்பர்களுடன் பகிர :