இணையத்தில் வெளியான எல்.கே.ஜி படத்தின் ஸ்னீக் பீக்..! Description: இணையத்தில் வெளியான எல்.கே.ஜி படத்தின் ஸ்னீக் பீக்..!

இணையத்தில் வெளியான எல்.கே.ஜி படத்தின் ஸ்னீக் பீக்..!


இணையத்தில் வெளியான எல்.கே.ஜி படத்தின் ஸ்னீக் பீக்..!

ஆர்.ஜே. பாலாஜி நடிகராக அறிமுகமாகும் படம் தான் எல்.கே.ஜி. தற்போது நாடாளுமன்றத் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியல் நையாண்டிப் படமாக உருவாகியிருக்கும் இந்தத் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.

இந்த படத்திற்கு புதுமுக இயக்குநர் பிரபு இயக்கியுள்ளார்.படத்தில் ஆர்ஜே பாலாஜிக்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த் நடித்துள்ளார். படம் முழுக்க முழுக்க அரசியலை மையமாக வைத்து உருவாகியுள்ளனர். இந்த படத்தில் அரசியல் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் அறிமுகமாகிறார். இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் செய்திருக்கிறார் .

ஆர் ஜே பாலாஜியும், நாஞ்சில் சம்பத்தும் டப்பிங் செய்யும் போது எடுத்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியது .அதில் எல்.கே.ஜி படத்தின் ட்ரைலரில் இடப்பெற்றிருந்த ஒரு டயலாக்கை நாஞ்சில் சம்பத் பேச ஆர் ஜே பாலாஜி அவரை கலாய்த்து சிரிச்சு டப்பிங் ஸ்டுடியோவே அமர்களப்படுத்தினர் . இந்த வீடியோவை நீங்களே பாருங்க.

மேலும் நேற்று இப்படத்தின் சில காட்சிகள் வெளியிடப்பட்டது. அதில் மீடியாக்கள் கேள்விகேட்க அதற்க்கு இவர் பதில்கொடுக்கும் காட்சிகள் மீடியாவையே கலாய்க்கும் படி அமைத்திருந்தது. இதன் வீடியோ இணைப்பு கீழே பார்த்து மகிழுங்கள்.


நண்பர்களுடன் பகிர :