தினம் ஒரு நெல்லி... புற்றுநோய்க்கு வைக்கும் கொள்ளி...! Description: தினம் ஒரு நெல்லி... புற்றுநோய்க்கு வைக்கும் கொள்ளி...!

தினம் ஒரு நெல்லி... புற்றுநோய்க்கு வைக்கும் கொள்ளி...!


தினம் ஒரு நெல்லி... புற்றுநோய்க்கு வைக்கும் கொள்ளி...!

நெல்லிக்காய்க்கு நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும் தன்மை உண்டு. அதனால் தான் சங்க இலக்கியக் காலத்தில் அவ்வைப்பாட்டி, அதியமானுக்கு நெல்லிக்கனி கொடுத்ததாக படித்திருப்போம்.

இந்த நெல்லிக்காயில் ஏராளமான மருத்துவ குணங்களும் இருக்கின்றன. அதுகுறித்து தெரிந்துகொள்ள மேலே படியுங்கள்.

நெல்லிக்காயில் வைட்டமின் சி, இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட் ஆகியவை அதிகமான அளவு உள்ளது.தினசரி காலையில் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் முடி பிரச்னைகள், சருமப் பிரச்னைகள் ஆகியவை சரியாகும். நம் உடல் ஆரோக்கியமும் மேம்படும்.

ரத்தசோகையை நீக்கி, ஞாபகசக்தியையும் அதிகரிக்கும். நெல்லிக்காயில் உள்ள ஆண்டி_ஆக்ஸிடண்ட் புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கும். தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியும் தடைபடும் எனத் தெரிய வந்துள்ளது. நம் உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் டாக்ஸின்கள் வெளியேற்றப்பட்டு உடல் எடையையும் குறைக்கும்.

அல்சரால் அவதிப்படுபவர்கள் தினசரி காலையில் நெல்லிக்காய் ஜீஸ் குடித்து வந்தால் அல்சர் மட்டுப்படும். நெல்லிக்காயில் உள்ள நார்ச்சத்து நம் குடல் இயக்கத்தை சீராக்கும். மலச்சிக்கலைத் தீர்க்கும்.நெல்லிக்காயில் உள்ள ஆன்டிஆக்ஸிஜென்டுகள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து புற்றுநோயினை தடைசெய்கிறது. ஒரு கிலோவே 20 முதல் 40 ரூபாய்க்குள் கிடைக்கும் இந்த நெல்லியை வாங்கி தினம் ஒன்று என சாப்பிட்டு நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் தானே?


நண்பர்களுடன் பகிர :