தனி ஒருவனாக இந்திய எல்லையைக் காத்த ஜஸ்வந்த்... சீனாவே சிலை வைத்து கொளரவித்த இந்திய வீரனின் கதை..! Description: தனி ஒருவனாக இந்திய எல்லையைக் காத்த ஜஸ்வந்த்... சீனாவே சிலை வைத்து கொளரவித்த இந்திய வீரனின் கதை..!

தனி ஒருவனாக இந்திய எல்லையைக் காத்த ஜஸ்வந்த்... சீனாவே சிலை வைத்து கொளரவித்த இந்திய வீரனின் கதை..!


தனி ஒருவனாக இந்திய எல்லையைக் காத்த ஜஸ்வந்த்... சீனாவே சிலை வைத்து கொளரவித்த இந்திய வீரனின் கதை..!

எப்போது வேண்டுமானாலும் போர் மேகம் சூழ்ந்து, குண்டு மழை பொழிந்து விடும் அபாயத்துக்கு உரியது ராணுவப்பணி. ஆனால் தாய்நாட்டுப் பற்றை புனிதமாகக் கருதி அதை செய்யும் ராணுவவீரர்களுக்கு ஈடு இணையே கிடையாது. அப்படி இந்திய எல்லையை தனி ஒருவனாக 72 ,மணி நேரம் காத்த ஒரு ராணுவ வீரனின் சரித்திரம் தான் இந்த பதிவு.

ஜம்முகாஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் அண்மையில் இந்திய ராணுவ வீரர்கள் மடிந்தனர். இப்போது ஐஸ்வந்தை நினைவுகொள்வது பொருத்தமாகவும் இருக்கும். அது 1962ம் ஆண்டு. நவம்பர் 15. போர் முடியும் தருணம். இந்திய ராணுவமே மனதளவிலும், தொழில்நுட்ப ரீதியாகவும் நம்பிக்கையை கைவிட்டிருந்த நேரம் அது. இந்திய அரசு தன் படைகளை திரும்ப அழைத்துக் கொண்டு இருந்தது.

அப்போது garhwal rifles படை பிரிவைச் சேர்ந்த ஐஸ்வந்த் சிங் ராவத், திரிலோக் சிங்நேகி, கோபால்சிங் ஆகியோர் திரும்பி போக மனம் இல்லாமல் தவித்தனர். அவர்கள் திரும்பி போகவும் இல்லை. ஜஸ்வந்த் சிங் ராவத்துக்கு அப்போது வெறும் 21 வயது தான். அவரோடு அந்த இருவரும் சேர்ந்து போராடிக் கொண்டிருந்தனர்.

சீனாவிடம் அப்போதே உயர்ரக துப்பாக்கிகள் இருந்தன. மீடியம் மிஷின் கன், பீரங்கிரக துப்பாகியோடு சீனா மோதின. ஆனால் இந்திய வீரர்கள் மூவரிடமும் வெறும் லைட் மிஷின் கன் ரக துப்பாக்கிகள் தான் இருந்தது. ஆனல் அதற்காக களத்தில் இருந்த இந்திய வீரர்கள் மூவரும் சோர்ந்து போய்விடவில்லை. சீன ராணுவத்திடம் இருந்து, அவர்கள் ஆயுதங்களைக் கைப்பற்றி அவர்களையே தாக்கலாம் என முடிவெடுத்தனர் ஜஸ்வந்த், கோபால்சிங் ஆகியோர் சீன ராணுவத்தினர் அருகில் கூட வர முடியாதபடிக்கு தோட்டா மழை பொழிந்தனர் இதேபோல் ஐஸ்வந்தும், கோபால்சிங்கும் கையில் கிடைத்த ஹேண்ட் கிரேன்களை எடுத்துக் கொண்டு முதுகால் தவழ்ந்து, தவழ்ந்து இந்திய எல்லைக்கு வந்தனர்.

அப்போது சீனர்கள் சுட்ட குண்டு கோபால்சிங்கை அடுத்தடுத்து துளைத்தது. ஐஸ்வந்தையும் சில குண்டுகள் பதம் பார்த்தன. அதன் பின்னரும் ஐஸ்வந்த் முயற்சியை விடவில்லை. இரவு நேரம் என்பதால் சீனர்களும் போரை நிறுத்தி வைத்தனர். இந்த நேரத்தை சாதகமாக்கிக் கொண்ட ஐஸ்வந்த், அதை ஒட்டியிருந்த கிராமத்துக்கு[ப் போய் உதவி கேட்டார். அங்கு நுரா, சிலா என இரு பெண்கள் உதவிக்கு வந்தனர். அவர்கள் மூலம் பல பதுங்கு குழிகளில் துப்பாக்கிகளை பொருத்துகிறார்.

காலையில் சீனர்கள் மீண்டும் சுடத் துவங்க, ஐஸ்வந்த் மீண்டும் சுடுகிறார். 72 மணி நேரம் இந்த தாக்குதல் நீடிக்கிறது. பதுங்கிய இந்தியா எப்படி மீண்டும் பாய்கிறது என சீனர்கள் குழம்பிப் போகிறார்கள். இந்திய ராணுவம் பெரும் படையை மீண்டும் அனுப்பியதாக சீனர்கள் நம்பினர். 300 சீன ராணுவத்தினரின் உயிரை அந்த 72 மணி நேர போர் குடித்திருந்தது. அப்போது தான் ஐஸ்வந்த்க்கு உணவு கொண்டு சென்ற கிராமவாசி ஒருவரை சீன ராணுவம் பிடிக்கிறது.

சூழலை புரிந்துகொண்ட ஐஸ்வந்த் தன்னைத்தானே சுட்டுக் கொல்கிறர். அதன் பின்னும் வெறி அடங்காத சீன ராணுவம் அவர் தலையை துண்டித்து எடுத்தது. போர் முடிந்த பின்னர் மண்ணில் துப்பாக்கிகளை புதைத்து, நிறுத்தி போர்வீரன் இருப்பது போல் காட்டிவிட்டு தனி ஒருவனாக ஐஸ்வந்த் போராடியிருப்பது சீன ராணுவ உயர் அதிகாரிகளுக்குத் தெரிய வருகிறது.

சீன அரசே அவர் காவல் காத்த நூர்னாங்கில் பகுதியில் அவருக்கு சிலை நிறுவியது. அந்த இடம் ஐஸ்வந்த்கர் என்றே அழைக்கப்படுகிறது. அவருக்கு மகாவீர் சக்ரா விருது வழங்கி இந்திய அரசு கொளரவித்தது. அவரோடு சென்ற கோபால்சிங், திரிலோக் சிங்கிற்கும் மகாவீர் விருது வழங்கப்பட்டது.


நண்பர்களுடன் பகிர :