தாய்நாட்டைக் காக்கும் ராணுவவீரர் தன் தாயிடம் பேசிய ஆடீயோவைக் கேளுங்கள். உடைந்து உருகிப் போவீர்கள்...! Description: தாய்நாட்டைக் காக்கும் ராணுவவீரர் தன் தாயிடம் பேசிய ஆடீயோவைக் கேளுங்கள். உடைந்து உருகிப் போவீர்கள்...!

தாய்நாட்டைக் காக்கும் ராணுவவீரர் தன் தாயிடம் பேசிய ஆடீயோவைக் கேளுங்கள். உடைந்து உருகிப் போவீர்கள்...!


தாய்நாட்டைக் காக்கும் ராணுவவீரர் தன் தாயிடம் பேசிய ஆடீயோவைக் கேளுங்கள். உடைந்து உருகிப் போவீர்கள்...!

தீவிரவாதிகளின் தற்கொலைப்படைத் தாக்குதலால் 40க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் இறந்தனர். தற்போது நம் தமிழ்நாட்டை சார்ந்த ராணுவ வீரர் ஒருவர் தனது தாயாரிடம் பேசிய ஆடீயோவைக் கேளுங்கள். உடைந்து உருகிப் போவீர்கள்.

அம்மா போனில் அழைத்ததும், ‘’ம்ம்ம்....சொல்லும்மா என்று ஆரம்பிக்கிறார் அந்த ராணுவ வீரர்.

திருப்பியும் அங்க போறியா? என்கிறார் அவரது தாய்.

ஆமா...சண்டை நடக்குற இடத்துக்கு போயிட்டு இருக்கோம்.

நாங்கல்லாம் செத்து, நொந்து கிடக்குறோம். நீ இது மாதிரி பண்ணுற என்கிறார் அவரது தாய்.

நான் போனாலும்(இறந்து) தேசத்துக்காக போனதா நினைச்சுகினு சந்தோசமா இருங்க...ஒரு பிள்ளையை தேசத்துக்கு கொடுத்ததா நினைச்சுக்கங்க. ஒன்னும் இல்ல. போறேன். வர்ற்றேன்னா வரேன். இல்லைன்னா நல்லபடியா அடக்கம் பண்ணுங்க.

அப்படி எதுனா நடந்தாலும் ஊருக்குத்தான் வரும். ஊரில் நல்லபடியா அடக்கம் பண்ணுங்க..

அய்யோ சாமி அப்படிச் சொல்லாதா...என அழுகிறார் அவரது தாயார்.

அப்படி நடக்காது. பத்திரமாத்தான் இருக்கோம் நாங்க...பக்கத்தில் இருக்கோம். எப்போஎன்ன நடக்கும்ன்னு தெரியாது என்கிறார் ராணுவவீரர்.

உடனே அவரது தாயார் ‘பத்திரமா இரு சாமி...’’பத்திரமா போயிட்டு, பத்திரமா வா...”என்கிறார்.

போனை வாங்கும் அவரது உறவுக்காரர் ஒருவர், நீங்க எத்தனை பேரு போறீங்க? என்கிறார்.

அதற்கு ராணுவவீரர் சிவச்சந்திரன், 400 பேருக்கு மேல போறோம். ஒன்னும் சொல்ல முடியாது. வந்தா அதிர்ஷ்டம். ஒருத்தரு நாட்டுக்காக போனதா நினைச்சுக்கங்க. நல்லா வந்தேன்னா ஒகே. இல்லைன்னா நாட்டுக்காக பண்ணுனதா நினைச்சுக்கோங்க. எதுனாலும் ஊருக்குத்தான் வரும். நடக்குற இடத்துக்கு பக்கத்திலேயே நாங்க இருக்கோம். ”என்று முடிக்கிறார்.

அந்த ஆடியோவைக் கேட்கும் போதே, நெஞ்சம் துடிக்கிறது.

ஆடியோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


நண்பர்களுடன் பகிர :