காமெடியர்கள் அல்ல, இவர்கள் தான் நிஜ ஹிரோக்கள்! இறந்த ராணுவவீரர் குடும்பத்துக்காக உருகிய அறந்தாங்கி நிஷா. Description: காமெடியர்கள் அல்ல, இவர்கள் தான் நிஜ ஹிரோக்கள்! இறந்த ராணுவவீரர் குடும்பத்துக்காக உருகிய அறந்தாங்கி நிஷா.

காமெடியர்கள் அல்ல, இவர்கள் தான் நிஜ ஹிரோக்கள்! இறந்த ராணுவவீரர் குடும்பத்துக்காக உருகிய அறந்தாங்கி நிஷா.


காமெடியர்கள் அல்ல, இவர்கள் தான் நிஜ ஹிரோக்கள்!    இறந்த ராணுவவீரர் குடும்பத்துக்காக உருகிய அறந்தாங்கி நிஷா.

தீவிரவாதிகளின் தற்கொலைப்படைத் தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த இரு ராணுவ வீரர்களும் உயிர் இழந்தனர். இவர்களின் வீட்டுப் பக்கம் பிரதான நாயகர்களே எட்டிப் பார்க்கவில்லை.

இந்நிலையில் இரு ராணுவ வீரர்களின் இல்லங்களுக்கும் போய் நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் தலா ஒரு லட்ச ரூபாய் வழங்கி ஆறுதல் சொல்லி வந்தார். இப்போது அறந்தாங்கி நிஷா செய்த செயல் இவர்கள் எல்லாம் காமெடியர்கள் அல்ல, நிஜ ஹீரோக்கள் என சொல்ல வைத்துள்ளது.

அறந்தாங்கி நிஷா அப்படி என்ன செய்தார்? என்கிறீர்களா? இறந்து போன சிவச்சந்திரன் வீட்டுக்குப் போன அறந்தாங்கி நிஷா அவர்களில் ஒருவராகவே மாறிப் போனார். சிவச்சந்திரனின் குழந்தைகளை அள்ளி எடுத்து கொஞ்சினார். அவரால் சிவச்சந்திரனின் இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை, இதை அவரே உடைந்து உருகி பேசும் வீடீயோவையும் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் பேசியது தான் இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

‘’பிப்ரவரி 14யை காதலர்தினம் என்பார்கள். என்னைப் பொறுத்தவரை இந்த நாட்டையே காதலிச்ச ராணுவவீரர்கள் நம்மை விட்டு பிரிஞ்ச தினமாத்தான் நான் பார்க்குறேன். இன்னிக்கு அரியலூர் பகுதியை சேர்ந்த ராணுவவீரர் சிவச்சந்திரன் வீட்டுக்குத்தான் நான் போயிட்டு வாரேன். அங்க நடந்த சில சம்பவங்களைத்தான் நான் பதிவு செய்ய விரும்புறேன்.

காரணம் அதை பார்க்கும் சக்தி நமக்கு கிடையாது. இரண்டு வயசு குழந்தையை கையில் வைச்சுட்டு, ஒரு வார குழந்தையை வயிற்றில் சுமந்துட்டு ரொம்ப பெருமையாக சொல்லுறாங்க. ஒரு ராணுவ வீரரின் மனைவியா பெருமைப்படுறாங்க. அதே நேரம் குழந்தையின் தாயா வருத்தப்படுறாங்க. ஏன்னா அந்த குழந்தை வெளியில் வந்து அப்பா எங்கன்னு கேட்டா என்ன சொல்லுவாங்க? அந்த இரண்டு வயசு குழந்தை வளர்ந்து கேட்டா என்ன சொல்லுவாங்க?

அந்த போட்டோ கிட்ட நான் நின்னப்போ, அத்தைகிட்டே வாடான்னு சொன்னேன். அவன் ப்பா...ப்பான்னு அப்பாவைச் சொன்னான். என்ன வாழ்க்கை இது? பாகிஸ்தானிய நாய்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை நம்மகிட்ட இருக்கு. ஆனா அதையும் தாண்டி சில விசயங்களை மட்டும் நான் பதிவு செய்றேன்.

இந்த வீடியோ எதுக்குன்னா, நம்மளோட வீரன், சிவச்சந்திரன் அண்ணாவோட மனைவி நர்சிங் முடிச்சுருக்காங்க. அவுங்க இருக்குற வீடு பெரிய மாமனார் வீடு. போன்னு சொன்னாக்கூட எங்களுக்கு போறதுக்கு வழி இல்லன்னு சொல்லுங்க. நாமெல்லாம் இன்னிக்கு உயிரோட இருக்கதுக்கு காரணமான ராணுவ வீரரின் மனைவி போறதுக்கு வழியில்லன்னு சொல்லுவதை கேட்கவா நம்ம இருக்கோம்? சிவச்சந்திரன் அண்ணனோட ஆசை, அவரு பையனை ஐ,பி.எஸ் படிக்க வைக்கணும். அதனால தான் போன வருசம் லீவுல வந்தப்போ, ராணுவ டிரஸ்ஸை அவனுக்கு தைச்சுப் போட்டு சுதந்திர தினத்துக்கு கொடி ஏத்தி தெருவுல உள்ள எல்லாக் குழந்தைகளுக்கும் சாக்லேட் கொடுத்தாராம்.

திருச்சியில் மூட்டை தூக்கித்தான் அவரு படிச்சாராம். போனவருசம் அவரோட அண்ணா ஒரு ஆக்ஸிடண்ட்ல சாக்கடிச்சு இறந்துருக்காங்க. இப்போ அந்த குடும்பத்துக்கு ஆண் துணை இல்ல. அவுங்க மாமனார் மட்டும் தான் வயசானவங்களா இருந்தாங்க. தயவு செஞ்சு அரசாங்கம் அந்த குழந்தைகளின் படிப்புச் செலவை முழுமையா ஏத்துக்கணும். அந்த பெண்ணுக்கு அரசுப்பணி கொடுக்கணும். அவுங்களுக்கு அரசு சொந்தவீடு கொடுக்கணும். மற்ற உதவிகள் மக்களால் செய்ய முடியும். ஆனால் இந்த உதவிகளை அரசு தான் செய்ய முடியும்.

காரில் ஏறும் போது அந்த பையன் அத்தை..அத்தைன்னு சொன்னான். காரில் கொஞ்சம் தூக்கி வைச்சுட்டு கொஞ்ச நேரம் கொஞ்சுனேன். ஈஸியா பழகுறவங்ககிட்ட கூப்பிட்டு கூப்பிட்டு அப்பாவை காமிக்குறான். அவனுக்கு போன் சத்தம் கேட்டாலே அப்பா கூப்பிடுறாங்கன்னு சொல்லுறான். இதெல்லாம் தாங்க உண்மையிலேயே முடியல. இன்னொரு குடும்பம் சுப்பிரமணியன் அண்ணன் குடும்பத்துக்கும் உதவணும். இந்திய ராணுவத்தில் இருக்கும் அனைவருக்கும் சல்யூட் பண்ணிக்குறோம். ராணுவ வீரர்களுக்கு எங்களது பிரேயர்ஸ் இருக்கும். இறந்த குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.”என அந்த உருக்கமான வீடீயோவில் பதிவு செய்துள்ளார் அறந்தாங்கி நிஷா.

வீடீயோ இணைப்பு கீழே


நண்பர்களுடன் பகிர :