அடேங்கப்பா...மஞ்சளுக்கு இத்தனை மருத்துவ குணங்களா? உங்கள் வீட்டிலும் எப்போதும் மஞ்சள் இருப்பது நல்லது.. Description: அடேங்கப்பா...மஞ்சளுக்கு இத்தனை மருத்துவ குணங்களா? உங்கள் வீட்டிலும் எப்போதும் மஞ்சள் இருப்பது நல்லது..

அடேங்கப்பா...மஞ்சளுக்கு இத்தனை மருத்துவ குணங்களா? உங்கள் வீட்டிலும் எப்போதும் மஞ்சள் இருப்பது நல்லது..


அடேங்கப்பா...மஞ்சளுக்கு இத்தனை மருத்துவ குணங்களா?    உங்கள் வீட்டிலும் எப்போதும் மஞ்சள் இருப்பது  நல்லது..

பொதுவாக மங்களகரமான விசயங்களில் ஒன்றாக இருக்கும் மஞ்சளுக்கு ஏராளமான மருத்துவ குணங்களும் உண்டு. அது குறித்து தெரிந்து கொள்ள மேலே படியுங்கள்....

மஞ்சளில் நார்ச்சத்து,வைட்டமின் ஏ,பி,டி ஆகிய சத்துகள் உள்ளது. சிறந்த நோய் நீக்கியாகவும் மஞ்சள் செயலாற்றுகிறது. மஞ்சளுக்கு நுண்கிருமிகள், பூஞ்சாணை போக்கும் தன்மையும் உண்டு. உடலுக்கு குளிர்ச்சியைத்தரும் மஞ்சள் நோய் எதிர்ப்பு சக்தியையும் தூண்டுகிறது. ரத்தத்தை சுத்தப்படுத்துவதோடு, நம் ஈரலுக்க்கும் மஞ்சள் பலம் சேர்க்கும்.

முன்பெல்லாம் நம் தமிழ்ப்பெண்கள் தினமும் மஞ்சள் தேய்த்து குளிப்பதை வழக்கமாக வைத்திருந்தனர். காலப்போக்கில் பேஷன் என்னும் பெயரில் மஞ்சள் தேய்த்து குளிப்பது குறைந்து போனதால் தான் இப்போது சில சில பெண்களுக்கு முகத்தில் முடி வளருவது, முகப்பரு, கரும்புள்ளி போன்றவை ஏற்படுகிறது.

மஞ்சளில் பல வகைகள் உண்டு. இதில் விரலி மஞ்சள் சமையலுக்கும், கஸ்தூரி மஞ்சள் மருந்துக்கும் பயன்படுத்தப்படுகிறது.பச்சை மஞ்சள் கிழங்கு பசை கால் ஸ்பூன் அளவுக்கு எடுத்து இதை ஒரு டம்ளர் நீராவிவிட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி குடித்தால் சளி, நுரையீரல் தொற்று குணமாகும். இதை ஆவி பிடிப்பதன் மூலம் தலைநீரேற்றம், மூச்சடைப்பு, நுரையீரல், சளி பிரச்னைகள் தீரும்.

இதேபோல் மஞ்சளில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருக்கிறது. புற்றுநோய் வராமல் தடுப்பதோடு, நம் உள் உறுப்புகளில் உள்ள புண்களை ஆற்றுவதிலும் மஞ்சளுக்கு முக்கிய பங்கு உண்டு. வீக்கத்தை கரைப்பதிலும் மஞ்சளின் பங்கு உண்டு. அம்மை நோய்க்கு மஞ்சளுடன், வேப்பிலையை அரைத்து கொப்பளங்களில் போட்டு, அதன் பின் குளித்து வந்தால் அம்மை நோய் போட்ட வடு இல்லாமல் போகும். பூச்சிக்கடிக்கான மருந்து தயாரிப்பிலும் மஞ்சளுக்கு முக்கிய பங்கு உண்டு. மஞ்சள் பசையுடன், சிறிது சுண்ணாம்பு சேர்த்து பூச்சிக்கடி ஏற்பட்ட இடத்தில் வைத்து கட்டினால் பூச்சிக்கடியினால் ஏற்பட்ட வலி, வீக்கம் மறையும்.

இத்தனை மருத்துவ குணங்கள் கொண்ட மஞ்சளை உங்கள் வீட்டிலும் எப்போதும் வைத்துக் கொள்ளலாம் தானே?


நண்பர்களுடன் பகிர :