ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய அரியவகை காசு கண்டெடுப்பு... இலங்கையை வென்ற பெருமையையும் பேசும்..! Description: ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய அரியவகை காசு கண்டெடுப்பு... இலங்கையை வென்ற பெருமையையும் பேசும்..!

ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய அரியவகை காசு கண்டெடுப்பு... இலங்கையை வென்ற பெருமையையும் பேசும்..!


ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய அரியவகை காசு கண்டெடுப்பு... இலங்கையை வென்ற பெருமையையும் பேசும்..!

பழனி அருகே உள்ள போடுவார்பட்டி கிராமத்தில் ஆறுமுகம் என்பவரது வீட்டில் சில பழைய காசுகள் கிடைத்துள்ளன. இதனை தொல்லியல் ஆய்வாளர் நந்திவர்மன் மற்றும் பழனி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வரலாறு ஆசிரியை இராஜேஷ்வரி, பழனியாண்டவர் கலைக் கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவர் முனைவர் இரவிச்சந்திரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் நந்திவர்மன் கூறுகையில், ஆயிரம் ஆண்டு பழமையான இந்த காசுகள் கோப்பரகேசரி வர்மன் முதலாம் இராஜராஜ சோழன் கால காசாகும். தஞ்சையை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த சோழ அரசர்களில் புகழ் பெற்றவர் இவர்.

கி.பி 985ம் ஆண்டு அருள் மொழி வர்மர் என்னும் பெயரோடு ஆட்சிப் பொறுப்பு ஏற்ற இராஜராஜ சோழன் கி.பி 1014 முடிய முப்பது ஆண்டுகள் ஆட்சி செய்தார். இவர் கி.பி 993ல் இலங்கை மீது படையெடுத்து இலங்கை முழுவதையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார்.

இவர் இலங்கை போரில் வெற்றி பெற்றதை குறிக்கும் வகையில் வெளியிட்ட காசுகள் தான் இப்போது கிடைத்து உள்ளது. தங்கம் மற்றும் செம்பினால் வெளியிடப்பட்ட இந்த காசுகள் இலங்கை சோழ சாம்ராயத்தின் ஒரு பகுதி என குறிக்கின்றது.

1.5 செ.மீ விட்டமும், 0.5 மி.மீ தடிமனும் கொண்ட இந்த காசுகள் ஒழுங்கற்ற வட்ட வடிவம் கொண்டவை. இந்த நாணயத்தின் ஒரு பக்கம் போர் வீரர்கள் வேல் உடன் இருப்பது போலவும், மறுபுறம் இராஜராஜ சோழனின் முத்திரையும் பொறிக்கப்பட்டு உள்ளது. செம்பினால் ஆன இந்த காசுகள் பழனி பக்கத்தில் அதிகம் கிடைக்கிறது." என்றார்.

இதே மன்னர் தங்கத்திலும் நாணயத்தை வெளியிட்டார். அதுவும் இதே போல் பல வீடுகளில் இருந்து இருக்கும். ஆனால் அவற்றை தங்கத்தின் மதிப்பு அறிந்து ஆபரண தேவைக்காக பொது மக்கள் அழித்து இருக்கக் கூடும். இது தமிழர்களின் பெருமையையும் பேசும் நாணயமாக உள்ளது.


நண்பர்களுடன் பகிர :