பதிலடி கொடுக்க தயாராகும் இந்தியா: வெளியானது விமான போர் ஒத்திகை செய்யும் வீடியோ! Description: பதிலடி கொடுக்க தயாராகும் இந்தியா: வெளியானது விமான போர் ஒத்திகை செய்யும் வீடியோ!

பதிலடி கொடுக்க தயாராகும் இந்தியா: வெளியானது விமான போர் ஒத்திகை செய்யும் வீடியோ!


பதிலடி கொடுக்க தயாராகும் இந்தியா: வெளியானது விமான போர் ஒத்திகை செய்யும் வீடியோ!

இந்தியாவில் புல்வாமா மாவட்டத்தில் நடந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க, நம் இந்திய விமானப் படையினர் பாகிஸ்தான் எல்லை பகுதியில் போர் ஒத்திகை நடத்திய வீடியோ இணையத்தில் வெளியாகி அனைவரிடமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா மாவட்டத்தில் இந்திய துணை இராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது தீவிராதி நடத்திய தாக்குதலில் 45 பேர் பரிதாபமாக பலியாகினர்.

வீரர்களை இழந்த குடும்பத்தினர் மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த இந்தியாவுமே இந்த கொடூர தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என குரல்கள் எழுந்தன.

இன்நிலையில் இந்திய விமானப் படையினர் பாகிஸ்தான் எல்லை அருகே போர் ஒத்திகை நடத்தும் இணையத்தில் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது பாகிஸ்தானை ஒட்டியுள்ள ராஜஸ்தான் மாநிலம், பொக்ரான் விமானப் படை சார்பில் நடத்தப்பட்ட ஒத்திகையாகும். ஒத்திகையில் அனைத்து வகையான போர் விமான படையினரும், ஹெலிகாப்டர் படையினரும் இரவு பகலாக பயிற்சியில் ஈடுபடுத்த பட்டுள்ளார். சுமார் 137 மேற்பட்ட விமானங்கள் இலக்கை துல்லியமாக தாக்கி அழித்து வருகின்றன.

மேலும், இலக்குகளை நொடியில் தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை, வான்வழி ஏவுகணை சோதனையும் இதில் நடத்தப்பட்டது.

இந்த பயிற்சியால் புல்வாமா தாக்குதலில் இந்தியா சந்தித்த மிகப்பெரிய இழப்புக்கு என்நேரம் வேண்டுமானாலும் இந்தியா சார்பில் பதிலடி கொடுக்கப்படலாம் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.


நண்பர்களுடன் பகிர :