ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள்... வலிகளை சுமந்த தாய்...சுகபிரசவத்தில் பிறந்த குழந்தைகள்..! Description: ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள்... வலிகளை சுமந்த தாய்...சுகபிரசவத்தில் பிறந்த குழந்தைகள்..!

ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள்... வலிகளை சுமந்த தாய்...சுகபிரசவத்தில் பிறந்த குழந்தைகள்..!


ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள்... வலிகளை சுமந்த தாய்...சுகபிரசவத்தில் பிறந்த குழந்தைகள்..!

முன்பெல்லாம் நம் ஊர்களில் அதிகமான சுக பிரசவங்கள் தான் நடந்து வந்தன. முன்பு பெண்களிடம் அதிக அளவில் உடல் உழைப்புகள் இருந்தது. அதனால் சுகப்பிரசத்துக்கும், வலி தாங்குவதற்கும் பெண்கள் தயாராக இருந்தனர். ஆனால் இன்று ஆண், பெண் என அனைத்து தரப்பினரையும் உடல் உழைப்பற்ற போக்கு சூழ்ந்து கொண்டது. இதனால் இன்றைக்கு சுகப்பிரசவங்களே அரிதாகிப் போய்விட்டது.

இந்த நிலையில் ஒரு 25 வயது பெண்ணுக்கு, ஒரே பிரசவத்தில் ஏழு குழந்தைகள் பிறந்துள்ளது. அதுவும் சுகப்பிரசவத்தில்!

கிழக்கு ஈராக்கின் தியாலி மாகாணத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தான் இந்த ஆச்சர்ய சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் ஆறு பெண் குழந்தைகள், ஒன்று மட்டும் ஆண்குழந்தை. ஒரே பிரசத்தில் பிறந்த குழந்தைகள் என்பதால் இவற்றின் எடை, இதய செயல்பாடு உள்ளிட்டவைகள் தனித்தனியே ஆய்வு செய்யப்பட்டன.

ஆனால் குழந்தைகள் எந்த பிரச்னையும் இல்லாமல் மிகுந்த ஆரோக்கியத்துடனே இருந்தன. இந்த பெண்ணுக்கு ஏற்கனவே 3 குழந்தைகள் இருந்த நிலையில், இதன் மூலம் அவர்களுக்கு பத்து குழந்தை ஆகி உள்ளது. இதனால் அங்குள்ள ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த குழந்தைகளின் தந்தை, யுசூப் பத்லே, இதற்கு மே; குழந்தை பெற்றுக்கொள்ள மாட்டோம். இவைகளை ஒழுங்காக வளர்ப்போம் எனக் கூறி உள்ளார்.

முன்னதாக கடந்த ஆண்டு லெபனான் நாட்டின் செயிண்ட் ஜார்ஜ் யுனிவர்சிட்டி மருத்துவமனையில் ஒரே பிரசத்தில் 6 குழந்தைகள் பிறந்தன. 1997ல் அமெரிக்காவில் ஒரே பிரசவத்தில் ஏழு குழந்தைகள் பிறந்தன. அதன் பின்னர் ஒரே பிரசத்தில் ஏழு குழந்தைகள் பிறப்பது இப்போது தான் என்பது குறிப்பிடத்தக்கது.


நண்பர்களுடன் பகிர :