நடிகர் கெளதம் கார்த்திக் செஞ்ச செயலைப் பாருங்க... ஒரு ராயல் சல்யூட் கொளதமுக்கு பார்சல்... Description: நடிகர் கெளதம் கார்த்திக் செஞ்ச செயலைப் பாருங்க... ஒரு ராயல் சல்யூட் கொளதமுக்கு பார்சல்...

நடிகர் கெளதம் கார்த்திக் செஞ்ச செயலைப் பாருங்க... ஒரு ராயல் சல்யூட் கொளதமுக்கு பார்சல்...


நடிகர்  கெளதம் கார்த்திக் செஞ்ச செயலைப் பாருங்க...   ஒரு ராயல் சல்யூட் கொளதமுக்கு பார்சல்...

நடிகர் கொளதம் கார்த்திக் இன்று ஒரு செயல் செய்துள்ளார். இந்தியத் திருநாட்டையும், ராணுவத்தையும் நேசிக்கும் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மத்திய ரிசர்வ் காவல் படையினர் சென்ற பேருந்து மீது 14ந்தேதி தீவிரவாதிகள் நிகழ்த்திய தற்கொலை தாக்குதலில் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள சவலாப்பேரியைச் சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் சுப்பிரமணியன் என்பவரும் உயிர் இழந்தார்.

கோவில்பட்டி அருகேயுள்ள சவலாப்பேரி கிராமத்தைச் சேர்ந்த கணபதி - மருதாத்தாள் தம்பதி மகனான சுப்பிரமணியன்(28) ஐடிஐ படிப்பு முடித்தார். பின்னர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய ரிசர்வ் காவல் படையில் (சிஆர்பிஎப்) சேர்ந்தார். ஜம்மு-காஷ்மீரில் பணியாற்றி வந்த இவர், கடந்த ஜனவரி மாதம் 13ஆம் தேதி சவலாப்பேரிக்கு வந்துவிட்டு, பிப்ரவரி 10ஆம் தேதி மீண்டும் பணிக்கு புறப்பட்டார்.

இந்நிலையில், பிப்ரவரி 14ஆம் தேதி ஜம்முவை சென்றடைந்த சுப்பிரமணியன் ஸ்ரீநகருக்கு வாகனத்தில் செல்லும்போது, தீவிரவாதிகள் நிகழ்த்திய தற்கொலை தாக்குதலில் உயிரிழந்தார்.

இன்று சுப்பிரமணியின் வீட்டுக்கே வந்த நடிகர் கார்த்திக்கின் மகனும், நடிகருமான கொளதம் கார்த்திக் சுப்பிரமணியின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார். இது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கொளதம் கார்த்திக்கின் இந்த செயலுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.


நண்பர்களுடன் பகிர :