உங்கள் கூந்தல் நீளமாக வளர வேண்டுமா? மூன்றே வாரத்தில் மூன்றடி நீளும் ஆச்சர்யம்... Description: உங்கள் கூந்தல் நீளமாக வளர வேண்டுமா? மூன்றே வாரத்தில் மூன்றடி நீளும் ஆச்சர்யம்...

உங்கள் கூந்தல் நீளமாக வளர வேண்டுமா? மூன்றே வாரத்தில் மூன்றடி நீளும் ஆச்சர்யம்...


உங்கள் கூந்தல் நீளமாக வளர வேண்டுமா? மூன்றே வாரத்தில் மூன்றடி நீளும் ஆச்சர்யம்...

பெண்களின் அழகே கூந்தல் தான். அதனால் தான் அழகான, நீளமான கூந்தல் கொண்ட பெண் அனைவருக்கும் பிடித்தவர் ஆகிறார். தலையில் கூந்தல் நிரம்ப பெண்கள் பூ சூடிக் கொள்வது அவர்களுக்கு கூடுதல் அழகைக் கொடுக்கும். இங்கே அழகு என்பதை விட கூந்தல், அதில் சூடி இருக்கும் பூ ஆகியவை லெட்சுமி கடாட்சம், ஐஸ்வர்யம் என்றெல்லாம் கிராமப்பகுதிகளில் சிலாகிப்பதை கேட்டு இருக்கிறோம்.

இந்த கூந்தல் நீளமாக வளர வேண்டும் என்பது தான் பல பெண்களின் விருப்பமும். ஆனால் சிலருக்கு கிடைக்கும் அந்த வரம், பலருக்கும் வாய்ப்பதில்லை. ஆனால் அவர்கள் இதை மட்டும் கடைபிடித்தாலே போதும் கூந்தல் நீளமாக வளர்ந்துவிடும். அது என்ன? அதுகுறித்து தெரிந்துகொள்ள மேலே படியுங்கள்.

முதலில் ஒரு பவுல் அல்லது கின்னத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அக்காசியா ஹெனி, வைட்டமின் பி 3, கால்சியம் கார்பணைட் ஆகியவை கூந்தல் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும். இவையெல்லாம் சாதாரணமாக நாம் கடைகளில் வாங்கிப் பயன்படுத்தும் ‘’பாண்ட்ஸ்’’ பவுடரிலேயே இருக்கிறது. அது இல்லாத பட்சத்தில் ஜான்சன் பேபி பவுடரையும் கூட பயன்படுத்தலாம்.

ஒரு கின்னத்தில் அரை டீ ஸ்பூன் அளவுக்கு பவுடரை போட்டுக்கணும். இதனோடு வைட்டமின் டி நிறைந்து இருக்கக்கூடிய ஆல்மண்ட் ஆயில் இரண்டு ஸ்பூன் கலக்க வேண்டும். ஒருவேளை இந்த பாதாம் ஆயில் உங்களிடம் இல்லாவிட்டால் தேங்காய் எண்ணெயும் பயன்படுத்தலாம். ஆனால் அதை மூன்று டீ ஸ்பூன் போடணும். இதனோடு வைட்டமின் இ சத்து கேப்ஸ்யூலை(இவியான் 600) சேர்க்க வேண்டும். மாத்திரைக்குள் இருக்கும் முழு ஆயிலையும் பிழிந்து அதற்குள் போட வேண்டும். இது 30 முதல் 32 ரூபாய் வரை மெடிக்கல் ஷாப்களில் கிடைக்கிறது.

இந்த கலவையை ஸ்பூனால் நன்றாக கலக்கணும்,. அதன் பின்னர் தலைமுடியின் வேர் வரை விரல்களால் மசாஜ் செய்ய வேண்டும். 5 முதல் 7 நிமிடங்கள் உள்ளாக தலை முழுவதும் தடவ வேண்டும். இந்த கலவையை உங்கள் தலைமுடியிலேயே இரவு முழுவதும் விட்டு விடுங்கள். வாரத்தில் ஒரு தடவை என மாதம் ஒரு 4 முறை தலையில் இதை தடவிப் பாருங்கள். மாற்றத்தை உணர்வீர்கள். அப்புறம் உங்க முடி வளர்வதைப் பார்த்து நீங்களே பொறாமைப்படுவீங்க...மினிமம் மூன்றடி கியாரண்டியாம்!


நண்பர்களுடன் பகிர :