சகலநோய்களையும் தீர்க்கும் ஆச்சர்யக் காய்... புற்றுநோய் முதல் எய்ட்ஸ் வரை போக்கும் அதிசயம்..! Description: சகலநோய்களையும் தீர்க்கும் ஆச்சர்யக் காய்... புற்றுநோய் முதல் எய்ட்ஸ் வரை போக்கும் அதிசயம்..!

சகலநோய்களையும் தீர்க்கும் ஆச்சர்யக் காய்... புற்றுநோய் முதல் எய்ட்ஸ் வரை போக்கும் அதிசயம்..!


சகலநோய்களையும் தீர்க்கும் ஆச்சர்யக் காய்...    புற்றுநோய் முதல் எய்ட்ஸ் வரை போக்கும் அதிசயம்..!

அன்றையகால நம் முன்னோர்கள் மிகவும் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு வாழ்ந்து வந்தனர். ஆனால் இன்று பாஸ்ட்புட், பர்கர் என துரிதஉணவு கலாச்சாரத்தில் புகுந்து விட்டோம். அதன் விளைவாக முப்பது வயதிலேயே வயோதிக நோய்களான சர்க்கரை வியாதியையும், இரத்த அழுத்தத்தையும் சுமந்து திரிபவர்களையும் பார்க்கிறோம்.

துரித உணவுகளுக்கு முந்தைய நம் முன்னோர் உணவில் இயற்கைக்கே முக்கியத்துவம் இருந்தது. ஆனால் இன்று அதில் இருந்து நகர்ந்து வந்து விட்டதன் விளைவாகத்தான் மனித உடல் நோய்களின் கூடாரமாக மாறி நிற்கிறது. இந்த நிலையிலும் நம் உடலை நோய்களில் இருந்து காத்துக்கொள்ள கைகொடுக்கிறது ஒரு காய்!

அதன் பெயர் அதலைக்காய். ஆந்திரா, கர்நாடகம், மஹாராஸ்டிரா, தமிழகத்தின் தென் மாவட்டங்களான மதுரை, விருதுநகர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இந்த காய் கிடைக்கிறது. இந்த காய் நம்மை சர்க்கரை, இரத்த அழுத்தம், மஞ்சள் காமாலை, புற்றுநோய் என அனைத்தில் இருந்தும் காக்கும். இது பாகற்காய் வகையை சேர்ந்த கொடி தாவரம். இதன் சத்துகள் நம்மை பலவித நோய்களில் இருந்தும் காக்கிறது. இது இந்தியாவில் மட்டுமே வளரக் கூடியது என்பது இதன் கூடுதல் சிறப்பு.

மழை நேரங்களில் காளான் எப்படி துளிர்விட்டு முளைக்குமோ அதே போல் இந்த காயும் தானாக சாலையோரமும், விளைநிலங்கள் அருகிலும் விளையத் துவங்கும். இதில் நீர்ச்சத்து, புரதம், கால்சியம், பொட்டாசியம் உள்ளிட்ட பல சத்துகளும் உள்ளன.

இந்த அதலைக்காய், பாகற்காய் இனம் என்பதால் அதைப் போலவே கசப்பு சுவையுள்ளது. அதனாலேயே இதை பலரும் தவிர்க்கின்றனர். இந்த அதலைக்காயை பொரியல் செய்தோ, புளிக் குழம்பு வைத்தோ சாப்பிடலாம். நாம் வைக்கும் சரியான பக்குவம் இதற்கு ருசியை கூட்டும்.

அப்புறம் என்ன அதாரு...அதாரு...அதலைக்காய்க்கு ஈடேதுன்னு? பாடிகிட்டே சாப்பிட்டிங்க...உங்க ஆரோக்கியத்தை மெயிண்டைண் பண்ணுங்க...


நண்பர்களுடன் பகிர :