ஜனவரி 14 இனி காதலர் தினம் அல்ல...கருப்பு தினம் என் மகன் இறந்துட்டானா? வேதனையோடு கேட்கும் தந்தையின் பாசப் போராட்டம்! Description: ஜனவரி 14 இனி காதலர் தினம் அல்ல...கருப்பு தினம் என் மகன் இறந்துட்டானா? வேதனையோடு கேட்கும் தந்தையின் பாசப் போராட்டம்!

ஜனவரி 14 இனி காதலர் தினம் அல்ல...கருப்பு தினம் என் மகன் இறந்துட்டானா? வேதனையோடு கேட்கும் தந்தையின் பாசப் போராட்டம்!


ஜனவரி 14 இனி காதலர் தினம் அல்ல...கருப்பு தினம் என் மகன் இறந்துட்டானா? வேதனையோடு கேட்கும் தந்தையின் பாசப் போராட்டம்!

ஜனவரி 14ம் தேதியை இந்திய நாட்டின் வரலாற்றில் கருப்பு தினம் என்றே சொல்லலாம். இனி இந்திய வரலாற்றுப் பக்கத்தில் காதலர் தினத்துக்கு இடம் இல்லை. ‘’ஓ எந்தன் காஷ்மீரின் ரோஜாப்பூ...விதவைகள் பார்த்து அழத்தானோ?”என்று ராணுவவீரர்களின் வாழ்வைச் சொல்லும் திரைப்பட பாடலைப் போன்ற துயரம் அரங்கேறிவிட்டது.

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40க்கும் அதிகமான இந்திய ராணுவ வீரர்கள் பலியானார்கள். இன்னும் பலர் தீவிர சிகிட்சை பிரிவில் இருக்கின்றனர். இந்த தாக்குதலுக்கு உலகின் பல்வேறு நாடுகளும் கண்டணம் தெரிவித்து வருகின்றன.

இப்படி உயிர் இழந்த ராணுவ வீரர்களில் தூத்துக்குடி மாவட்டம், சவலாப்பேரியை சேர்ந்த்ச் சுப்ரமணியனும் ஒருவர்.கண்பதி என்பவரது மகனான இவர் ஐடிஐ படித்துவிட்டு, 5 ஆண்டுகளுக்கு முன்னர் சி.ஆர்.பி.எப் படையில் சேர்ந்தார்.உத்திரப்பிரதேசத்தில் தன் பணியைத் துவங்கிய இவர் சென்னை, காஷ்மீர் ஆகிய இடங்களிலும் பணி செய்துள்ளார்.

பலியான ராணுவ வீரர் சுப்பிரமணியனுக்கு திருமணம் ஆகி ஒன்றரை ஆண்டுகளே ஆகிறது. இவரது மனைவி கிருஷ்ணவேணி அழுது புலம்பிக் கொண்டிருக்கிறார்.இந்த தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லை. திருமணம் முடிந்து ஒன்றரை ஆண்டுகளே ஆன நிலையில் கணவரை பறிகொடுத்து இருக்கிறார் கிருஷ்ணவேணி.

தற்கொலைப்படை தாக்குதலில் சுப்பிரமணியன் பலியாகியுள்ள நிலையில் இதுவரை அரசோ, ராணுவமோ முறையாக அவரது குடும்பத்துக்கு இதுகுறித்த தகவலை சொல்லவில்லை.

கடைசி நம்பிக்கை! ஆனால் இப்போதும் கூட அரசிடம் தொடர்ந்து இதுதொடர்பாக கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கிறார் சுப்பிரமணியின் தந்தை கணபதி. ‘என் மகன் காயம்பட்டு உள்ளாரா? அல்லது இறந்து விட்டாரா? நேற்று முன் தினம் தான் போனில் பேசினேன். எங்களுக்கு அரசு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.”என்ற அவரது பேச்சு மனதை ரணமாக்குகிறது. இதேபோல் சுப்பிரமணியின் மனைவி கிருஷ்ணவேணியும் தன் கணவர் கடைசியாக பேசிய வார்த்தைகளை சொல்லி உருகுகிறார்.


நண்பர்களுடன் பகிர :