உங்களுக்கு அளவுக்கு அதிகமா சளி பிடிக்குமா? இதை மட்டும் செய்யுங்க சளி பிரச்னை வரவே வராது... Description: உங்களுக்கு அளவுக்கு அதிகமா சளி பிடிக்குமா? இதை மட்டும் செய்யுங்க சளி பிரச்னை வரவே வராது...

உங்களுக்கு அளவுக்கு அதிகமா சளி பிடிக்குமா? இதை மட்டும் செய்யுங்க சளி பிரச்னை வரவே வராது...


உங்களுக்கு அளவுக்கு அதிகமா சளி பிடிக்குமா?  இதை மட்டும் செய்யுங்க சளி பிரச்னை வரவே வராது...

சளி பெரிய பிரச்னையா? என்று ஒரு பட்டிமன்றமே நடத்தலாம். காரணம் சாதாரணமாக ஒருவாரத்தில் பலருக்கும் ஓடி விடும் சளி, சிலரை படுத்தி எடுத்துவிடும். அப்படி என்ன செய்துவிடும்? என்று கேட்கிறீர்களா?

நம் சுவாசக்குழாயில் சளியின் தேக்கம் அதிகரித்து விட்டாக் மூச்சு விடக் கூட முடியாது. அது மிகுந்த சிரமத்தை உள்ளாக்கும். அப்படியானால் என்ன செய்வது? உடனே அலோபதி மருத்துவரைத் தேடி ஓடி விடாதீர்கள். நாமே இயல்பாக நம் வீட்டில் இருக்கும் சில பொருள்களின் மூலம் இயற்கை முறையில் சளியை விரட்டி விடலாம். அதுகுறித்து தெரிந்துகொள்ள மேலே படியுங்கள்..

சளி வந்த பின்பு போக்குவதை விட வரும்முன்னர் வராமல் தடுப்பதில் தான் நம் வெற்றி இருக்கிறது. அந்த வகையில் ஒரு ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகரை ஒரு டம்ளர் நீரீல் கலந்து, அதை தினமும் குடித்தாலே அதிகப்படியான சளி உற்பத்தி தடுக்கப்பட்டுவிடும்.

எலுமிச்சை சாறையும், தேனையும் ஒன்னாகக் கலந்து அதை தினசரி மூன்று வேளை குடித்து வந்தால் சளி பிரச்னையில் இருந்து உடனே விடுபடலாம்.

இதேபோல் ஒருபாத்திரத்தில் சுடுதண்ணீரை ஊற்றி, அதில் மூலிகை இலைகளைப் போட்டு அந்த நீரால் தினசரி நான்கு முறை ஆவி பிடித்தாலும் சளி விரைவில் வெளியேறிடும்.

ஒரு டம்ளர் இளஞ்சூடான நீரில் மஞ்சள் தூள், உப்பு கலந்து அதை தினமும் 4 முறை குடித்து வந்தால் சளி தொண்டையில் தேங்குவது குறையும்.

இதேபோல் ஒரு டம்ளர் தண்ணீரில் இஞ்சி, மிளகை சேர்த்து மிதமான தீயில் 5 முதல் 7 நிமிடங்கள் வரை கொதிக்க வைத்து வடிகட்டி அதில் தேன் கலந்து குடித்து வர சளி விரைவில் வெளியேறும்.

இதெல்லாம் சின்ன, சின்ன சூட்சமங்கள் தான். ஆனால் இவற்றை செஞ்சு பாருங்க சளி உங்களை நெருங்கவே நெருங்காது.


நண்பர்களுடன் பகிர :