தெருக்கடையில் 20 ரூபாய்க்கு முடி திருத்தம் செய்யும் நபருக்கு 30 ஆயிரம் கொடுத்த வெளிநாட்டுக்காரர்: நேர்மைக்கு கிடைத்த பரிசு Description: தெருக்கடையில் 20 ரூபாய்க்கு முடி திருத்தம் செய்யும் நபருக்கு 30 ஆயிரம் கொடுத்த வெளிநாட்டுக்காரர்: நேர்மைக்கு கிடைத்த பரிசு

தெருக்கடையில் 20 ரூபாய்க்கு முடி திருத்தம் செய்யும் நபருக்கு 30 ஆயிரம் கொடுத்த வெளிநாட்டுக்காரர்: நேர்மைக்கு கிடைத்த பரிசு


தெருக்கடையில் 20 ரூபாய்க்கு முடி திருத்தம் செய்யும் நபருக்கு 30 ஆயிரம் கொடுத்த வெளிநாட்டுக்காரர்: நேர்மைக்கு கிடைத்த பரிசு

வெளிநாட்டை சேர்ந்த பலரும் இந்தியாவின் இயற்க்கை அழகு, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றால் ஈர்த்து சுற்றுலாவிற்கு வருவது வழக்கம். அவ்வாறு வரும் மக்கள் ஒரு மாதம் வரை இந்தியாவில் தங்கியிருந்து அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் சென்று பார்வையிட்டு பின்பு அவர்ரவர் ஊருக்கு திரும்பி செல்வார்கள் .

அவ்வாறு இந்தியாவுற்க்கு சுற்றுலா வரும் பயணிகள் அவர்கள் ஊரில் இல்லாத சில பொருட்களை நம் ஊரில் இருந்து வாங்கி செல்வார்கள். மேலும் ஒரு மாதம் வரை தங்குவதால் அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை நம் ஊர் கடைகளில் வாங்கியாக வேண்டும். அவ்வாறு அவர்களுக்கு தேவையான பொருட்களை நம் ஊர் கடைகளில் வாங்கும்போது அதன் விலையை பன்மடங்கு உயர்த்தி பலரும் விற்பனை செய்வார்கள். அவர்களும் அவர்கள் நாட்டு பணத்தின் மதிப்பு இந்தியாவில் அதிகம் என்பதால் கேக்கும் விலையிலே பொருட்களை வாங்குகின்றனர்.

ஆனால், அகமதாபாத்தில் நேர்மையாக நடந்த ஒரு நபரை பாராட்டிய வெளிநாட்டுக்காரர்,அவருக்கு அதிக பணம் கொடுத்து சென்றுள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது. நார்வே நாட்டை சேர்ந்த வெளிநாட்டுக்காரர் ஒருவர் நம் ஊர் தெருவில் இருந்த ஒரு சலூன் கடையில் முடி திருத்தம் செய்துள்ளார். வெளிநாட்டுக்காரருக்கு பிடித்தமான முறையில் மிகவும் நேர்த்தியாகவும் ,செம்மையாகவும் முடி வெட்டியுள்ளார்.

முடிவெட்டி முடித்த பின்பு அந்த நபர் முடிவெட்டியதற்கான தொகை எவ்வளவு என்று கேட்கையில் கடைக்காரர் மிகவும் நேர்மையாக வெறும் 20 ரூபாய் என்று கூறியுள்ளார். இதனை கேட்டு ஆச்சரியமடைந்த அந்த வெளிநாட்டுக்காரர் 30 ஆயிரம் பணம் கொடுத்து சென்றுள்ளார். இந்த பணத்தினை குடும்ப தேவைக்காக பயன்படுத்திக்கொள்ளுமாறு கூறியுள்ளார் அந்த வெளிநாட்டுக்காரர்.இந்த செய்தி பல செய்தித்தாள்களில் வெளிவர அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது. கீழே உள்ள வீடியோ பாருங்க உங்களுக்கே புரியும்..


நண்பர்களுடன் பகிர :