ஆதலால் காதல் செய்வீர்...துயர் துடைக்கும் இலவச விடுதி காதலர்கள் தவறாமல் படிங்க..உங்களுக்காகவே ஒரு சேவை! Description: ஆதலால் காதல் செய்வீர்...துயர் துடைக்கும் இலவச விடுதி காதலர்கள் தவறாமல் படிங்க..உங்களுக்காகவே ஒரு சேவை!

ஆதலால் காதல் செய்வீர்...துயர் துடைக்கும் இலவச விடுதி காதலர்கள் தவறாமல் படிங்க..உங்களுக்காகவே ஒரு சேவை!


ஆதலால் காதல் செய்வீர்...துயர் துடைக்கும் இலவச விடுதி  காதலர்கள் தவறாமல் படிங்க..உங்களுக்காகவே ஒரு சேவை!

காதல் இனம், மொழி என எதையும் பார்ப்பது இல்லை. இரு உள்ளங்களுக்கு மட்டும் பிடித்து இணைந்து விட்டால் அதன் பின்னர் காதல் ஒரு காவியம் தான். காதலிக்கும் இரு உள்ளங்களுக்கு இருக்கும் பக்குவம் அவர்களது பெற்றோர்களுக்கு இருப்பதில்லை. அதனால் தான் சாதி, மதம் என பார்த்து காதலுக்கு உறவுகள் குறுக்கே நிற்கின்றன.

அதிலும் சாதி மாறி காதல் திருமணம் செய்து கொண்டால் சில இடங்களில் ஆணவக் கொலைகளும் கூட நடக்கிறது. காதல் ஜோடிகளை ஒரு கும்பல் விரட்டி பலி தீர்க்க அலையும் சம்பவங்களும் நிகழ்ந்து வருவதை பார்த்திருக்கிறோம். இந்த சூழ்நிலையில் தான் சாதிமறுப்புத் திருமணத்தால் நடக்கும் ஆணவக் கொலைகளை தடுக்கும் வகையிலும், அவர்களது வாழ்வியல் எதிர்காலத்துக்கு உதவும் வகையிலும் திருச்சியில் விடுதி ஒன்று கட்டப்பட்டு உள்ளது.

ஆதலால் காதல் செய்வீர் என்ற அமைப்பு சார்பில் திருச்சியில் உள்ள அண்ணாநகர் போலீஸ் காலணியில் இந்த விடுதி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் குணசேகர், ‘’சாதி மறுப்புத் திருமணம் செய்தவர்கள் போலீஸ் ஸ்டேசன் போனாலும் அங்கு குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் இருக்க முடியாது. அதனால் தான் காதல் செய்து, சாதி மறுப்புத் திருமணம் செய்தவர்களின் நலனுக்காக இதை அமைத்துள்ளோம்.

இங்கு வருபவர்களுக்கு பாதுகாப்பான தங்கும் இடம், சட்ட உதவி வழங்கப்படும். இது அனைத்து மாவட்டங்களிலும் பரவலானால் சாதி மறுப்புத் திருமணம் செய்வோருக்கு உதவியாக இருக்கும்.”என்றார் அவர்.


நண்பர்களுடன் பகிர :