எனக்கு கிடைக்காதது என் பையனுக்கு கிடைச்சுருக்கு... குழந்தை பிறந்த நெகிழ்ச்சியில் நடிகர் சென்றாயன் உருக்கம்..! Description: எனக்கு கிடைக்காதது என் பையனுக்கு கிடைச்சுருக்கு... குழந்தை பிறந்த நெகிழ்ச்சியில் நடிகர் சென்றாயன் உருக்கம்..!

எனக்கு கிடைக்காதது என் பையனுக்கு கிடைச்சுருக்கு... குழந்தை பிறந்த நெகிழ்ச்சியில் நடிகர் சென்றாயன் உருக்கம்..!


எனக்கு கிடைக்காதது என் பையனுக்கு கிடைச்சுருக்கு... குழந்தை பிறந்த நெகிழ்ச்சியில் நடிகர் சென்றாயன் உருக்கம்..!

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் மூலம் அகில உலக பேமஸ் ஆனவர் நடிகர் சென்றாயன். அவருக்கு குழந்தை பிறந்துள்ள நிலையில் எனக்கு கிடைக்காதது, என் மகனுக்கு கிடைத்துள்ளது என உருகுகிறார் சென்றாயன். அது என்ன எனத் தெரிந்துகொள்ள மேலே படியுங்கள்.

திருமணம் முடிந்த சென்றாயனுக்கு குழந்தை இல்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியின் போதே தனக்கு குழந்தை இல்லாததால் பல கஷ்டங்களையும் அனுபவித்ததாக கமலிடம் சொல்லி வருத்தப்பட்டார் சென்றாயன்.

குழந்தை இல்லாததால் தான் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்கப் போவதாகவும் சொன்னார். இந்நிலையில் சென்றாயன் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோதே அவரது மனைவி கர்ப்பமடைந்த செய்தியும் வந்தது. இந்நிலையில் சென்றாயனுக்கு ஆண் குழந்தை பிறந்தது. திருமணம் முடிந்து நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் பிறந்த குழந்தை என்பதால் சென்றாயன், அவர் மனைவி கயல்விழி என மொத்த குடும்பமும் துள்ளிக் குதித்து வருகிறது.

இதுகுறித்து சென்றாயன் கூறுகையில்,’’மருத்துவர் என்னிடம் உங்களுக்கு பையன் பிறந்துள்ளான் என்று சொன்னதும் ஆனந்த கண்ணீர் வந்துவிட்டது. பையனை கையில் தூக்கும்போது, இந்த உலகமே எனக்கு கிடைத்தது போல் இருந்தது. நான் பிறந்த போது என்னை யாருக்கும் தெரியாது. என் ஊரில் சிலருக்குத் தான் தெரியும்.

ஆனால் இப்போது என் மகன் பிறந்ததை உலகம் கொண்டாடுகையில் அவன் அதிர்ஷ்டசாலி. அந்தவகையில் எனக்கு கிடைக்காதது என் மகனுக்கு கிடைத்துள்ளது.”என்று சொன்னார்.


நண்பர்களுடன் பகிர :