இன்று இணையத்தில் வெளியான விஸ்வாசம் படத்தின் மேக்கிங் வீடியோ Description: இன்று இணையத்தில் வெளியான விஸ்வாசம் படத்தின் மேக்கிங் வீடியோ

இன்று இணையத்தில் வெளியான விஸ்வாசம் படத்தின் மேக்கிங் வீடியோ


இன்று இணையத்தில் வெளியான விஸ்வாசம் படத்தின் மேக்கிங் வீடியோ

நடிகர் அஜித் மற்றும் இயக்குனர் சிவா கூட்டணியில் உருவான படம்தான் விஸ்வாசம். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாராவும், மகளாக நடிகை அனிகாவும் நடித்திருந்தனர். இவர்களுடன் இணைந்து தம்பி ராமையா,ரோபோ சங்கர், யோகி பாபு மற்றும் கோவை சரளா உள்ளிட்டோரும் நடித்திருந்தனர்.

பொங்கல் விடுமுறையை முன்னிட்டு கடந்த மாதம் 10ம் தேதி வெளியானது இப்படம்.மேலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூலைக் குவித்துவந்தது.

அஜித் நடத்த படங்களிலேயே வசூலில் விஸ்வாசம் தான் புதிய உச்சத்தை எட்டியதாகவும், தமிழ்நாட்டில் மட்டுமே ரூ.20 கோடி வரை விநியோகஸ்தர்களுக்கு லாபம் அள்ளி கொடுத்ததாகவும் திரையுலக விமர்சகர்கள் கருத்தும் தெரிவித்தனர்.

இன்று இப்படத்தின் மேக்கிங் வீடியோவை படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. மேக்கிங் வீடியோவில் நடிகர் அஜித் இடம்பெற்றிருக்கும் காட்சிகளை பார்த்து அவர் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.


நண்பர்களுடன் பகிர :