பிக்பாஸ் சென்ராயனுக்கு பிறந்தது ஆண் குழந்தை..! மகிழ்ச்சிக்கு மத்தியில் வெடித்த சர்ச்சை! Description: பிக்பாஸ் சென்ராயனுக்கு பிறந்தது ஆண் குழந்தை..! மகிழ்ச்சிக்கு மத்தியில் வெடித்த சர்ச்சை!

பிக்பாஸ் சென்ராயனுக்கு பிறந்தது ஆண் குழந்தை..! மகிழ்ச்சிக்கு மத்தியில் வெடித்த சர்ச்சை!


பிக்பாஸ் சென்ராயனுக்கு பிறந்தது ஆண் குழந்தை..! மகிழ்ச்சிக்கு மத்தியில் வெடித்த சர்ச்சை!

தனுஷ் நடித்த பொல்லாதவன் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் சென்ராயன். தொடர்ந்து சிலம்பாட்டம், மூடர் கூடம், ஆடுகளம் போன்ற பல படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.பிக்பாஸ் சீசன் இரண்டில் பாகேற்ற பின்னர் புகழின் உச்சத்திற்கே சென்றார்.

சென்ராயன் கயல்விழி என்பவரை காதலித்து, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்த போதுதான் அவர் மனைவி கர்ப்பமான செய்தி வெளியில் தெரிந்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் திருமணமாகி பல வருடங்கள் கடந்தும் தனக்கு குழந்தை இல்லை என கவலையுடன் கூறியிருந்தார். அவரின் கவலைக்கு அன்பு பரிசாக தற்போது ஆண் குழந்தையும் பிறந்துள்ளது.தாயும், சேயும் ஆரோக்கியமாக மருத்துவமனையில் இருக்கும், புகைப்படத்தையும் நடிகர் சென்ராயன் வெளியிட்டுள்ளார்.

இந்தநிலையில் புதிய விமர்சனங்களும், சர்ச்சைகளும் அவருக்கு கிளம்ப ஆரம்பித்துள்ளது. பிக்பாஸ் சீசன் இரண்டில் பங்குபெற்ற சென்ராயன் தனக்கு பல ஆண்டுகளாக குழந்தை இல்லை அதனால் தான் ஒரு அநாதை குழந்தையை தத்தெடுக்க போவதாக கூறியிருந்தார்.

அதன் பின் பிக் பாஸை தொகுத்து வழங்கிய கமலும் அடுத்த வருடத்திற்குள் உங்கள் மனைவிக்கு குழந்தை பிறக்கும் என்றும் கூறியிருந்தார்.

பின்னர் நடிகர் கமல் கூறிய வாக்கு பலித்தது போலவே சென்ராயன் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் சென்றாயன் பிக் பாஸில் கூறியதை போல அநாதை குழந்தையை தத்தெடுக்கவில்லை என விமர்சனங்கள் எழ தொடங்கியுள்ளன. பிக்பாஸ் நிகழ்ச்சியில் மக்களின் வாக்குகளை பெற அவர் இவ்வாறு கூறியிருக்கலாம் என்றும் கருத்துக்கள் எழ ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில், ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அது மட்டுமின்றி பிக்பாஸ் நித்தியாவும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.


நண்பர்களுடன் பகிர :