தன் காலில் விழுந்த ரசிகனிடம் இருந்து தேசிய கொடியை பறித்த தல டோனி.! Description: தன் காலில் விழுந்த ரசிகனிடம் இருந்து தேசிய கொடியை பறித்த தல டோனி.!

தன் காலில் விழுந்த ரசிகனிடம் இருந்து தேசிய கொடியை பறித்த தல டோனி.!


தன் காலில் விழுந்த ரசிகனிடம் இருந்து தேசிய கொடியை பறித்த தல டோனி.!

நியூசிலாந்து அணியுடனான இன்றைய கிரிக்கெட் போட்டியில் நடைபெற்ற நிகழ்வு மூலம் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தல தோனி, ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மனதையும் வென்றுள்ளார்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான கடைசி இருபது ஓவர் போட்டி ஹாமில்டனில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங்செய்து ஆடிய நியூசிலாந்து அணி, தொடக்க ஆட்டக்காரர்களான முன்ரோ – சேஃபெர்ட்டின் அதிரடியான தொடக்கம் மற்றும் கோலின் டி கிராண்ட்ஹோமின் அதிரடி ஆட்டத்தால் 212 ரன்களை குவித்தது.

213 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, தொடக்க வீரர் தவான் வெறும் 5 ரன்களில் வெளியேற , அதன்பிறகு களத்திற்கு வந்த தமிழக வீரர் விஜய் சங்கர், அதிரடியாக ஆடினார். பொறுப்புடன் ஆடிய விஜய் சங்கர் 28 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் என 43 ரன்களை குவித்து சாண்ட்னெரின் பந்தில் விக்கட்டை பறிகொடுத்தார்.

பின்னர் ஆட வந்த ரிஷப் பண்ட் வந்த வேகத்தில் சிக்ஸர் பவுண்டரிகளுமாக அதிரடி காட்டி ரன் ரேட்டை உயர்த்தினார். 12 பந்தில் 28 ரன் விளாசிய நிலையில் பண்ட் ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா 38,ஹடிக் பாண்டியா 21, தோனி 2 ரன் என அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் இந்திய அணி தடுமாறியது.

கடைசியாக தினேஷ் கார்த்திக் மற்றும் க்ருனால் பாண்டியா ஜோடி சேர்ந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்ல கடைசி ஓவர் வரை போராடினர். எனினும் இந்தியாவால் 20 ஓவர்களில் 208 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 3 போட்டிகள் கொண்ட இருபது ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி கைப்பற்றியது

இன்று நடந்த போட்டியில் இந்திய அணி பீல்டிங் செய்துகொண்டிருந்த போது, தடைகளை தாண்டி இந்திய ரசிகர் ஒருவர் கையில் இந்திய தேசிய கொடியுடன் திடீரென மைதானத்திற்குள் புகுந்து நேராக தோனியை நோக்கி ஓடி வந்து தோனியின் காலில் விழுந்தார், அந்த ரசிகர் வைத்திருந்த இந்திய தேசிய கொடி தனது காலிற்கு கீழ் செல்வதை உணர்ந்த தோனி, உடனடியாக தேசிய கொடியை அந்த ரசிகனின் கையில் இருந்து பறித்துவிட்டார்.

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் தோனியின் இந்த செயலை பாராட்டி வருகின்றனர்.


நண்பர்களுடன் பகிர :