பம்மல் கே.சம்பந்தம் திரைப்பட பாணியில் பெண்ணின் வயிற்றில் கத்திரிக்கோல் வைத்து தைத்த மருத்துவர்கள் Description: பம்மல் கே.சம்பந்தம் திரைப்பட பாணியில் பெண்ணின் வயிற்றில் கத்திரிக்கோல் வைத்து தைத்த மருத்துவர்கள்

பம்மல் கே.சம்பந்தம் திரைப்பட பாணியில் பெண்ணின் வயிற்றில் கத்திரிக்கோல் வைத்து தைத்த மருத்துவர்கள்


பம்மல் கே.சம்பந்தம் திரைப்பட பாணியில்    பெண்ணின் வயிற்றில் கத்திரிக்கோல் வைத்து தைத்த மருத்துவர்கள்

கமலஹாசன், சிம்ரன் நடிப்பில் காமெடியாகவும், வசூல் ரீதியாகவும் சக்கைபோடு போட்ட படம் பம்மல் கே.சம்பந்தம். இத்திரைப்படத்தில் மருத்துவரான சிம்ரன், தன்னிடம் சிகிட்சைக்கு வரும் கலஹாசனின் வயிற்றில் கைக்கடிகாரத்தை வைத்து தைத்து விடுவார். இதே போல் ஒரு சம்பவம் நடந்துள்ளது. சிகிட்சையளித்த மருத்துவர் பெண்ணின் வயிற்றில் கத்திரிக்கோல் வைத்து தைத்துள்ளார்.

ஹைதராபாத்தை சேர்ந்த 33 வயது பெண் ஒருவருக்கு, அங்குள்ள அரசு மருத்துவமனையில் கடந்த நவம்பர் மாதம் அறுவை சிகிட்சை செய்யப்பட்டது. ஆனால் அதன் பின்னரும் அந்த பெண்ணுக்கு அடிக்கடி வயிற்றுப் பகுதியில் வலி இருந்து வந்தது.

இதனைத் தொடர்ந்து அவர் வயிற்றுக்கு ஸ்கேன் எடுத்துப் பார்த்தார். அப்போது தான் அவரது வயிற்றில் இரண்டு கத்திரிக்கோல்கள் இருப்பது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து அரசு மருத்துவமனையில் தனது மனைவி சிகிட்சையில் இருந்தார். அவருக்கு அறுவை சிகிட்சை நடந்தது. அப்போது அறுவை சிகிட்சை செய்த மருத்துவர்கள் கவனக் குறைவாக என் மனைவியின் வயிற்றில் கத்திரிக்கோல் வைத்துள்ளனர் என்று குற்றஞ்சாட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் பேரில் அவருக்கு அறுவை சிகிட்சை செய்த மருத்துவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த ஹைதராபாத் போலீஸார், மருத்துவர்களிடம் விசாரணையையும் துவங்கி உள்ளனர்.


நண்பர்களுடன் பகிர :