பற்களில் மஞ்சள் கரையா? சிம்பிளா வெண்மையாக்கும் வித்தை மருத்துவனை வேண்டாம்...பிளீச்சிங் வேண்டாம்! Description: பற்களில் மஞ்சள் கரையா? சிம்பிளா வெண்மையாக்கும் வித்தை மருத்துவனை வேண்டாம்...பிளீச்சிங் வேண்டாம்!

பற்களில் மஞ்சள் கரையா? சிம்பிளா வெண்மையாக்கும் வித்தை மருத்துவனை வேண்டாம்...பிளீச்சிங் வேண்டாம்!


பற்களில் மஞ்சள் கரையா? சிம்பிளா வெண்மையாக்கும் வித்தை   மருத்துவனை வேண்டாம்...பிளீச்சிங் வேண்டாம்!

பற்கள் மனிதனின் அழகைக் காட்டும் கண்ணாடி. ஆம், பல் இல்லாத பொக்கை வாயை கற்பனை செய்து பாருங்கள். முகம் அழகு என்றால், அந்த முகத்துக்கான வசீகரமே பற்கள் தான். அந்த பற்களின் பாதுகாப்புக்கு மிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம்.

பலருக்கும் பல்லில் மஞ்சள் கரை ஏறி இருக்கும். இதற்கு பல காரணங்கள் சொல்லலாம். சிலருக்கு புகையிலை பழக்கத்தினாலும் மஞ்சள் கரை இருக்கும். இதே போல் சிகரெட், அதிக அளவு பாக்கு பயன்படுத்துவோருக்கும் பற்கள் பொழிவு இழந்து காணப்படும்.

இந்த பற்களின் கரையை போக்க, நாம் அசிடிட்டிக்கு பயன்படுத்தும் ஈனோவை ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். இதே போல் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் எடுத்து, இவ்விரண்டையும் நன்றாக கலக்க வேண்டும். இப்போது இந்த கலவை பார்ப்பதற்கு பேஸ்ட் போல் ஆகி இருக்கும். இதை உங்கள் பிரஸ்ஸில் எடுத்து வைத்து பல் துலக்க வேண்டும். இப்படி வாரத்துக்கு ஒருமுறை செய்யும் போது, நாளடைவில் மஞ்சள் பல் வெள்ளையாகி விடும்.

ஆனால் ஒரு நிபந்தனை, இதை வாரத்துக்கு ஒருமுறை மட்டுமே செய்ய வேண்டும். இரண்டு, மூன்று வாரங்கள் முயற்சித்துப் பாருங்கள். உங்கள் பற்களில் மாற்றத்தை உணர்வீர்கள்.


நண்பர்களுடன் பகிர :