காதலர் தினம் கலர், கலர் சட்டைகளுக்கு அர்த்தம் தெரியுமா? ஒரு வாரமும் இப்படியெல்லாம் இம்பிரஸ் பண்ணுங்க... Description: காதலர் தினம் கலர், கலர் சட்டைகளுக்கு அர்த்தம் தெரியுமா? ஒரு வாரமும் இப்படியெல்லாம் இம்பிரஸ் பண்ணுங்க...

காதலர் தினம் கலர், கலர் சட்டைகளுக்கு அர்த்தம் தெரியுமா? ஒரு வாரமும் இப்படியெல்லாம் இம்பிரஸ் பண்ணுங்க...


காதலர் தினம் கலர், கலர் சட்டைகளுக்கு அர்த்தம் தெரியுமா?     ஒரு வாரமும் இப்படியெல்லாம் இம்பிரஸ் பண்ணுங்க...

காதல் இரு உள்ளங்களை இணைத்து வைத்து, இரு குடும்பங்களையும் இணைக்க வைக்கும் விழா. காதலர்கள் தங்கள் மொத்தக் காதலையும் கொண்டாடித் தீர்த்து மகிழும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 14ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஒரு வாரமும் காதலுக்கு திருவிழா தான் அதைப் பற்றித் தெரிந்து கொள்ள மேலே படியுங்கள்.

இதில் 7ம் தேதி ரோஸ் டேயாகக் கொண்டாடப்படுகிறது. 8ம் தேதி ப்ரபோஸ் டே...அதாவது காதலை தெரிவிக்கும் நாள். 9ம் தேதி,சாக்லேட் டே...காதலிக்கு சாக்லேட் வாங்கிக் கொடுத்து இம்பிரஸ் செய்யும் நாளாக 9ம் தேதி கொண்டாடப்படுகிறது.

10ம் தேதி பெடி டேவாகவும், 11ம் தேதி பிராமிஸ் டேவாகவும் கொண்டாடப்படுகிறது. இந்த பிராமிஸ் டே அன்று உன்னை கண் கலங்காமல் கடைசிக் காலம் வரை வைத்து கண்ணை மணி காப்பது போல் காப்பேன் என சத்தியம் செய்யும் நிகழ்வு அது.12ம் தேதி ஹக் டே...அதாவது கட்டிப் பிடிக்கும் நாள்!

13ம் தேதி கிஸ் டே அதாவது முத்தநாள். அதற்கு மறுநாளான 14ம் தேதி தான் காதலர் தினம். இதேபோல் காதலர் தினத்தன்று வண்ண, வண்ண சட்டைகளுக்கும் மிகுந்த முக்கியத்துவம் உண்டு. இனி எந்த கலருக்கு என்ன அர்த்தம் என்பதை பார்ப்போம்.

கருப்பு சட்டை போட்டால் காதலை நிராகரிக்கிறேன். வெள்ளை சட்டை போட்டால் ஏற்கனவே காதலிக்கிறேன். மஞ்சள் சட்டை போட்டால் காதலில் தோல்வி அடைந்துவிட்டேன். பச்சை சட்டை போட்டால் காதலுக்காக காத்திருக்கிறேன். நீல நிற சட்டை போட்டால் காதல் விண்ணப்பம் ஏற்கப்படும் என்று அர்த்தம்.

இதேபோல் ஆரஞ்சு நிற சட்டை போட்டால் காதலை சொல்லப் போகிறேன் என்றும், பிங்க் கலர் சட்டை போட்டால் காதலை ஏற்கப் போகிறேன் என்றும் அர்த்தம். சாம்பல் கலர் சட்டைக்கு காதலில் விருப்பம் இல்லை என்று அர்த்தம். என்ன வேலண்டண்ஸ் டேக்கு நீங்க என்ன கலர் சட்டை போடப் போறீங்க?


நண்பர்களுடன் பகிர :