ஓடிய தங்கை: சகோதிரிக்கு நடந்த திருமணம்.. சாதனை நாயகியின் சரித்திரத்துக்கு குவியும் பாராட்டுக்கள் Description: ஓடிய தங்கை: சகோதிரிக்கு நடந்த திருமணம்.. சாதனை நாயகியின் சரித்திரத்துக்கு குவியும் பாராட்டுக்கள்

ஓடிய தங்கை: சகோதிரிக்கு நடந்த திருமணம்.. சாதனை நாயகியின் சரித்திரத்துக்கு குவியும் பாராட்டுக்கள்


ஓடிய தங்கை: சகோதிரிக்கு  நடந்த திருமணம்..   சாதனை நாயகியின் சரித்திரத்துக்கு குவியும் பாராட்டுக்கள்

என்ன தலைப்பை பார்த்தவுடன் எப்படி யோசிப்பீர்கள் என்று சொல்லட்டுமா? தங்கை மாப்பிள்ளை பிடிக்காமல் ஓடிப்போனதால் அக்காவுக்கு நடந்த திருமணம் என்றா? உங்கள் வாயிலேயே ஒரு அடி போட்டுக் கொள்ளுங்கள். இது ஒரு சாகச நாயகியின் சரித்திர பயணம்.

வாழ்க்கை ஓட்டத்தில் பணம் மிகவும் தேவை. அதை ஓடிய சம்பாதித்து ஒரு தங்கை அக்காவின் திருமணத்தை நடத்தி இருக்கிறார். ஆஸ்திரேலியாவின் தேசிய விளையாட்டான கிரிக்கெட்டுக்கு இந்தியாவில் செம மவுசு. அதே நேரம் இந்தியர்களின் தேசிய விளையாட்டான ஹாக்கிக்கு கூட அந்த கிரேஸ் இல்லை. அப்படியான சூழலில் தடகள வீரர்களின் நிலையை சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.

இங்கு ஒரு சுவாரஸ்ய சம்பவம் நிகழ்ந்துள்ளது. மகாராஷ்ரா மாநிலம், புல்டானா மாவட்டத்தில் உள்ள சக்வான் கிராமத்தை சேர்ந்த தடகள வீராங்கணை பூனம் சோனானுக்கு 19 வயது ஆகிறது. இவரது தந்தை விவசாயக் கூலித் தொழிலாளியாக உள்ளார். வறுமையான குடும்பப் பிண்ணனியில் வாழ்ந்தாலும் பூனம் சோனனுக்கு தடகளத்தின் மீது அலாதி ப்ரியம்.

கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற தெற்காசிய ஜீனியர் தடகளத்தில் 3000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார் பூனம் சோனன். இப்படியான சூழலில் அவரது சகோதிரிக்கு திருமண ஏற்பாடுகள் நடந்தன. இந்த சூழ்நிலையில் அதற்கு நிதி திரட்டும் முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார் பூனம் சோனன்.

பள்ளி நிர்வாகமும் இதற்கு ஒத்துழைக்க, விஜேந்திர சிங் என்பவரிடம் பயிற்சிக்கு சேர்ந்து உள்ளார். பயிற்சிக்கான பணத்தையும் இந்த கூலித் தொழிலாளியின் மகளுக்கு ஒரு தொண்டு நிறுவனம் ஏற்றுக் கொண்டது. புனே மாரத்தானில் ஓடினார் பூனம் சோனன். இதில் முதல் பரிசாக 1.25 கிடைக்க, அதை அப்படியே சகோதிரியின் திருமணத்துக்கு கொடுத்து விட்டார்.

தெற்காசிய விளையாட்டுப் போட்டி தேர்வுகள் நடந்து வருகிறது. அதில் பங்கேற்க பூனம் சோனன் சென்று விட, பரிசு வாங்கி பணம் கொடுத்து, நடந்த சகோதிரியின் திருமணத்தில் கூட அவரால் கலந்து கொள்ள இயலவில்லை.


நண்பர்களுடன் பகிர :