50 ஆண்டுகளுக்கு பின்பு சந்தித்த முன்னாள் மாணவர்கள் வயோதிகத்திலும் சேர்த்து வைத்த வாட்ஸ் அப்... Description: 50 ஆண்டுகளுக்கு பின்பு சந்தித்த முன்னாள் மாணவர்கள் வயோதிகத்திலும் சேர்த்து வைத்த வாட்ஸ் அப்...

50 ஆண்டுகளுக்கு பின்பு சந்தித்த முன்னாள் மாணவர்கள் வயோதிகத்திலும் சேர்த்து வைத்த வாட்ஸ் அப்...


50 ஆண்டுகளுக்கு பின்பு சந்தித்த முன்னாள் மாணவர்கள் வயோதிகத்திலும் சேர்த்து வைத்த வாட்ஸ் அப்...

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகில் உள்ள விளாத்திகுளத்தில் மிகப்பழமையான அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கடந்த 1968 முதல் 1969 ம் ஆண்டில் பத்தாம் வகுப்ப பயின்ற மாணவ, மாணவியர் சந்தித்துக் கொண்ட ஆச்சர்ய நிகழ்வு நடந்தது. இவர்களை ஒன்றிணைத்தது வாட்ஸ் அப்!

மாணவப்பருவத்தில் துள்ளி திரிந்த தங்கள் பள்ளி மற்றும் தங்களது நண்பர்களை காணும் ஆவலில் அன்று பயின்றவர்களில் 33பேர் ஆர்வமுடன் மட்டுமின்றி உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். 50 ஆண்டுகள் கழித்து தங்களது நண்பர்களை பார்த்ததும் ஒருவருக்கொருவர் கை குலுக்கி தங்களது அன்பினை பகிர்ந்து கொண்டனர். தற்போதைய வயோதிகப்பருவத்தில் ஒருவருக்கொருவர் கைத்தாங்கல் கொடுத்து ,தங்களுக்கு கற்றுகொடுத்த ஆசிரியர்கள் மூன்றுபேரையும் வரவழைத்து கால்களை தொட்டு வணங்கி நெகிழச்செய்தனர்

மேலும் தாங்கள் பயின்ற பள்ளியில் தற்போது பயிலும் மாணவர்கள் நலன் கருதி அவர்களுக்காக சுமார் 2 லட்ச மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் அமைத்து கொடுத்து அதனை இன்று பழைய ஆசிரியர்கள் கையால் திறக்கச்செய்து மகிழ்ந்தனர்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் இந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்ற மாணவர்கள் இன்று ஒன்று சேர்ந்துள்ளோம் மிக்க மகிழ்ச்சியாகவும் மறக்கமுடியாத நிகழ்ச்சியாகவும் உள்ளது இதனை எங்களுக்கு வழங்கிய இறைவனுக்கு தான் நன்றி. எங்கள் ஆசிரியர்கள் மூன்றுபேரைத்தான் பார்க்க முடிகிறது. கல்வி மட்டுமே அழியாதது என்று நெகிழ்ச்சியுடன் கூறுகின்றனர் முன்னாள் மாணவர்களான இந்நாள் தாத்தா, பாட்டிகள்!

வயோதிகத்தை வீழ்த்தி பலரும் தங்கள் வாழ்க்கைத் துணையோடு வந்து கலந்து கொண்டது நெகிழ்வை ஏற்படுத்தியது.


நண்பர்களுடன் பகிர :