உழவனுக்கு சிலை வைத்து மரியாதை செய்யும் இலங்கை..! Description: உழவனுக்கு சிலை வைத்து மரியாதை செய்யும் இலங்கை..!

உழவனுக்கு சிலை வைத்து மரியாதை செய்யும் இலங்கை..!


உழவனுக்கு சிலை வைத்து மரியாதை செய்யும் இலங்கை..!

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்று சொன்னார் நம் தமிழ் கவிஞன் பாரதியார். அதை மெய்ப்பிப்பது போல் உழவனுக்கு சிலை வைத்து மரியாதை செய்கின்றனர் இலங்கை மக்கள்.

இலங்கை கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டம் வந்தாறுமூலை எனும் கிராமத்தில் உள்ள அம்பலத்தடி சந்திப்பகுதியில் வந்தாறுமூலை மேற்குகிராம மக்கள் அபிவிருத்தி சங்கம் மற்றும் வந்தாறுமூலை டைமண்ட் விளையாட்டுக் கழகத்தின் சார்பில் 6 அடி உயரத்தில் உழவன்சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இலங்கை மகாணத்தில் உள்ள வந்தாறு மூலைப் பகுதி முழுவதும் விவசாயம் நிறைந்த பகுதி. நெல் விவசாயம்தான் பிரதானமான விவசாயம். சுமார் 1,500 விவசாயக் குடும்பங்கள் உள்ளன. விவசாயம்தான் நாட்டுப் பொருளாதாரத்தின் முதுகெலும்புன்னு சொல்லுவாங்க.விவசாயம் செய்யுற உழவரை அங்கீகரிக்கும் விதமாக உழவன் சிலை அமைக்கலாம்னு சங்கத்தின் கூட்டத்தில் உறுப்பினர்கள், மக்கள் கலந்து ஆலோசனை செய்து முடிவு செஞ்சோம்.

சிலை வைத்த பிறகு, தைப்பொங்கல் நாளுக்குப் பிந்தைய ஒரு நாளில் கிராமத்தில் உள்ள விவசாயிகள் ஒன்று கூடி பொங்கல் வைத்து அந்த சிலைக்கு வழிபாடு செய்து உழவனுக்கான திருவிழாவை கொண்டாட வேண்டும் எனவும் முடிவு செஞ்சோம். முழு உழவனைப் போல, 6 அடி உயரத்தில் நின்ற படியே, வலது கையில் மண்வெட்டியை பிடித்தது போலவும், இடது தோளில் கலப்பையை சுமந்தபடியும் உள்ளது அந்தச்சிலை. சிலையின் உயரம் 6 அடி, பீடத்தின் உயரம் 4 அடி என மொத்தம் 10 அடி உயரத்தில் உள்ளது இச்சிலை. இந்த சிலையை கடந்த 25.06.16-ம் தேதி திறந்தோம். வயலில் உழவுப் பணி செய்யும் போது நாகர், யக்கர் காலத்தைச் சேர்ந்த 3 கல்வெட்டுகள் கிடைச்சுது. அதையும் இந்த சிலைக்கு கீழே வச்சிருக்கோம்.

ஒவ்வொரு வருசமும் தைப் பொங்கலுக்குப் பிறகு சங்கத்தின் உறுப்பினர்கள், மக்கள் ஒன்று சேர்ந்து ஒரு நல்ல நாளை முடிவு செய்வோம். அந்த நாளில் காலையில் நல்ல நேரத்தில் உழவன் சிலைக்கு மஞ்சள் தண்ணீரால் முழுக்கு (அபிசேகம்) செய்வோம். பிறகு சந்தனம், குங்குமம் பொட்டு வைத்து மலர் மாலை அணிவிப்போம். சிலைக்கு முன்பாகவே அடுப்பு மூட்டி பொங்கல் வைப்போம். அந்த வருசத்தில் நெல் அறுவடையில் கிடைத்த நெல்குத்திய அரிசியில்தான் பொங்கல் வைப்போம். பானையில் பால் பொங்கும் போது, குலசைச் சத்தம் எழுப்பியும், கைதட்டியும் பொங்கும் பொங்கலை வரவேற்போம். வெல்லம் கலந்து இனிப்புப் பொங்கலாக்கி உழவன் சிலைக்கு முன்பு வாழை இலையில் வைத்து படைத்து வழிபாடு செய்வோம்.”என்கின்றனர் அந்த பகுதிவாசிகள்.


நண்பர்களுடன் பகிர :