வாடகை பாக்கி..செல்போன் டவருக்கு சீல் வைத்த ஓனர் Description: வாடகை பாக்கி..செல்போன் டவருக்கு சீல் வைத்த ஓனர்

வாடகை பாக்கி..செல்போன் டவருக்கு சீல் வைத்த ஓனர்


வாடகை பாக்கி..செல்போன் டவருக்கு சீல் வைத்த ஓனர்

தனி மனிதர்கள் வாடகை கொடுக்காமல் வீட்டு உரிமையாளர்கள் நடவடிக்கை எடுக்கும் பல சம்பவங்களை பார்த்திருப்போம். ஆனால் அரசு நிறுவனம் ஆன பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் வாடகை கொடுக்காததால் ஒருவர் பூட்டு போட்டு உள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையை சேர்ந்தவர் முருகேசன். இவருக்கு சொந்தமான வணிக வளாகம் அருமனை பகுதியில் உள்ளது. இதன் மூன்றாவது மாடியின் மேல்தளத்தில் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் நிறுவனத்தின் டவர் உள்ளது. கடந்த 14 ஆண்டுகளாக இந்த டவர் இயங்கி வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக வாடகையை அந்நிறுவனம் உரிய நேரத்தில் செலுத்தவில்லை.

அதிலும் கடந்த மூன்று மாதங்களாக வாடகையை ஒரு ரூபாய் கூட செலுத்தவில்லை. மாடியை வாடகைக்கு விட்ட முருகேசன் பலமுறை அழைந்து கேட்டும் உரிய பலன் இல்லை. இந்நிலையில் முருகேசன் இன்று காலையில் டவர் அமைந்து உள்ள மாடியை பூட்டு போட்டு பூட்டினார்.

வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டு விடுவார்கள் என அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் பி.எஷ்.என்.எல் அதிகாரிகள்.


நண்பர்களுடன் பகிர :