குளுக்கோஸ்க்கு பதிலாக பீர்...மருந்தாக உடலில் செலுத்திய மருத்துவர்கள் Description: குளுக்கோஸ்க்கு பதிலாக பீர்...மருந்தாக உடலில் செலுத்திய மருத்துவர்கள்

குளுக்கோஸ்க்கு பதிலாக பீர்...மருந்தாக உடலில் செலுத்திய மருத்துவர்கள்


குளுக்கோஸ்க்கு பதிலாக பீர்...மருந்தாக உடலில் செலுத்திய மருத்துவர்கள்

பொதுவாகவே பீர் உடலுக்கு கேடு என்பது ஊர் அறிந்த செய்தி. ஆனால் ஒருவருக்கு குளுக்கோஸ்க்கு பதிலாக உடலில் மருந்தாக பீரை செலுத்தி அவரை மீட்டுள்ளனர் மருத்துவர்கள்.

வியட்நாம் நாட்டைச் சேர்ந்த நகுய் வான் நாட் என்கிற 48 வயதுக்காரருக்கு ரத்தத்தில் அதிக அளவு மெத்தனால் என்கிற ரசாயன பொருள் கலந்திருப்பது கண்டறியப்பட்டது. இவர் மருத்துவனையில் இதற்காக சிகிட்சை பெற்று வந்தார். அதிலும் இது 1119 மடங்கு கூடுதலாக உள்ளது என மருத்துவர்கள் கண்டறிந்தனர். இதே நிலை இன்னும் சிறிதுநேரம் நீடித்தால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

அப்போது உதித்தது தான் இந்த பீர் ஐடியா. முதலில் ஒரு லிட்டர் பீரை அவரின் உடலில் மருத்துவர்கள் செலுத்தியுள்ளனர். அதில் சிறிது முன்னேற்றம் தெரிந்தது. இப்படி மொத்தம் 15 பாட்டில் பீரைச் செலுத்திய பின்னர் அவருக்கு இயல்பு நிலை திரும்பியது.


நண்பர்களுடன் பகிர :