இது செல்பி இல்ல...செருப்பி..ஒரு கிராமத்து கவிதை! Description: இது செல்பி இல்ல...செருப்பி..ஒரு கிராமத்து கவிதை!

இது செல்பி இல்ல...செருப்பி..ஒரு கிராமத்து கவிதை!


இது செல்பி இல்ல...செருப்பி..ஒரு கிராமத்து கவிதை!

நகரத்துவாசிகள் பலரும் செல்பி மோகத்துக்கு அடிமையானவர்களே...காலையில் தூங்கி முழித்ததில் இருந்து, இரவு படுக்கும் வரை சராசரியாக 2 செல்பிக்களையாவது தட்டாதவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம்.

அந்த அளவுக்கு செல்பி மோகம் தலைவிரித்தாடுகிறது. இதை விட மோசமான ஒரு விசயம் உள்ளது. செல்பி எடுப்பதற்காக ஓடும் ரயிலின் முன் நிற்பது, மலை உச்சியில் அபாயகரமாக நின்றவாறு செல்பி எடுப்பது என பல ஆபத்துகளையும் விலை கொடுத்து வாங்குகின்றனர் மக்கள். தேசிய குற்ற ஆவணக்காப்பக புள்ளி விபரப்படி கடந்த ஆண்டு நம் நாட்டில் நூற்றுக்கும் அதிகமானோர் செல்பி எடுக்கப் போன போது, விபத்து ஏற்பட்டு இறந்து உள்ளனர்.

அதிலும் காதலர்களும் செல்பியும் பிரிக்கவே முடியாது. முழித்து விட்டேன் என காட்ட ஒரு செல்பியில் துவங்கி, தான் அணிந்திருக்கும் ஆடை, ஏன் பொட்டைக் கூட செல்பி எடுத்து காதலனுக்கு வாட்சப்பில் அனுப்புவதும், அவன் பதிலுக்கு செல்பி எடுத்து அனுப்புவதும் மில்லியன் செல்பிகளை தாண்டும். இதையெல்லாம் கிண்டல் செய்யும் வகையில் இந்த ஒற்றைப்படம் சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது.

கிராமத்து வெள்ளந்தியான குழந்தைகளுக்கும் இந்த செல்பி ஆசை வந்தது. ஆனால் அவர்களுக்கு செல்போன் கிடைக்கவில்லை. உடனே ஒரு ரப்பர் செருப்பின் வாருக்குள் கையை விட்டு செல்பிக்கு போஸ் கொடுக்கச் சொல்ல, அதற்கு குழந்தைகள் சீரியஸாகப் போஸ் கொடுக்கின்றன. இந்த படம் சோசியல் மீடியாக்களில் டிரெண்ட் ஆகிவருகிறது.


நண்பர்களுடன் பகிர :