பரபரப்பு பேட்டியால் ஒரே நாளில் ஹாட்டாபிக் ஆன விஜய் சேதுபதி... இங்கு அல்ல...கேரளத்தில்! Description: பரபரப்பு பேட்டியால் ஒரே நாளில் ஹாட்டாபிக் ஆன விஜய் சேதுபதி... இங்கு அல்ல...கேரளத்தில்!

பரபரப்பு பேட்டியால் ஒரே நாளில் ஹாட்டாபிக் ஆன விஜய் சேதுபதி... இங்கு அல்ல...கேரளத்தில்!


பரபரப்பு பேட்டியால் ஒரே நாளில் ஹாட்டாபிக் ஆன விஜய் சேதுபதி...  இங்கு அல்ல...கேரளத்தில்!

மனதில் தோன்றுவதை பளிச்சென்று பேசிவிடுபவர் விஜய் சேதுபதி. கேரளத்தில் அப்படி அவர் பேசிய விவகாரம் தான் இப்போது கேரளத்தின் ஹாட் டாபிக்.

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்து வரும் மாமனிதன் படத்தின் படப்பிடிப்பு கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியில் நடந்து வருகிறது. மார்க்சிஷ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகையான தேசாபிமானி விஜய் சேதுபதியை நேரில் சந்தித்து பேட்டி எடுத்து வெளியிட்டு உள்ளது.

அந்த பேட்டியில் விஜய் சேதுபதி, சபரிமலை விவகாரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயனின் அணுகுமுறை மிகச் சரியானது. அவரது முடிவும் சரியானது. கஜா புயல் பாதிக்கப்பட்ட போது தமிழகத்திற்கு கேரள அரசு சார்பில் பத்து கோடி ரூபாய் நிதி உதவி அளித்த கேரள முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

என்றும் அதில் பேட்டி கொடுத்து இருந்தார். இது கேரளத்தில் பினராயிக்கு எதிராக போராடி வருபவர்களுக்கு கடும் கோபத்தை உருவாக்கி உள்ளது. அதேநேரம் இடதுசாரிகள் விஜய் சேதுபதியின் கருத்தை கொண்டாடுகின்றனர்.

சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்திய கேரள அரசுக்கு எதிராக போராடியவர்கள் இனி விஜய் சேதுபதி படங்களை கேரளத்தில் புறக்கணிப்பு செய்வோம்...என பதிவிட்டு வருகின்றனர். சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 கேரளாவிலும் சக்கைபோடு போட்டது குறிப்பிடத்தக்கது.


நண்பர்களுடன் பகிர :