பெட்ரோல் போட்டவருக்கு நடந்ததை பாருங்க... பெட்ரோல் போடும் போது தொடரும் விபத்துகள் ஏன்? Description: பெட்ரோல் போட்டவருக்கு நடந்ததை பாருங்க... பெட்ரோல் போடும் போது தொடரும் விபத்துகள் ஏன்?

பெட்ரோல் போட்டவருக்கு நடந்ததை பாருங்க... பெட்ரோல் போடும் போது தொடரும் விபத்துகள் ஏன்?


பெட்ரோல் போட்டவருக்கு நடந்ததை பாருங்க...  பெட்ரோல் போடும் போது தொடரும் விபத்துகள் ஏன்?

கேரளாவில் நடந்த சம்பவம் இது. இப்போது இந்த வீடீயோ சமூக வலைதளங்கள் வழியாக வேகமாக பரவி வருகிறது.

வாகனத்தை ஓட்டும் கணவர், முன்னால் பெட்ரோல் டேங்கின் அருகிலேயே தனது மகனையும், பின் சீட்டில் மனைவியையும் வைத்துக் கொண்டு பெட்ரோல் போட வருகிறார். அவர்களை இறக்கி விடாமல் வாகனத்தில் அமர்ந்த வண்ணமே பெட்ரோல் போடுகிரார்.

பெட்ரோல் போட்டுக் கொண்டு இருக்கும் போதே திடீரென பைக் தீப்பிடித்தது. அதிர்ஷ்டவசமாக பைக்கில் இருந்த மூவரும் சிறு தீக்காயத்துடன் தப்பினர். தீப்பற்றி எரிந்து கொண்டு இருந்த பைக், பெட்ரோல் டேங்க் வரை செல்லும் முன்னர் பெட்ரோல் பங்கு ஊழியர்கள் விரைந்து போய் வாகனத்தை இழுத்து மாற்றினர்.

இதனால் அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சில வாரங்களுக்கு முன்னர் தமிழகத்தில் நெல்லையிலும் இப்படி ஒரு சம்பவம் நடந்தது. நெல்லையை சேர்ந்த ஆல்வின் என்பவர் தனது புதிய பைக்கில் பெட்ரோல் நிரப்பிய போது டீவீலர் தீப்பிடித்தது. அதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.

இப்படியாக பெட்ரோல் போடும் போது தீப்பிடிப்பது எதனால் என தெரிந்து கொள்ள மேலே படியுங்கள்...

பொதுவாகவே நாம் பெட்ரோல் போடும் போது சில துகள்கள் காற்றில் கலந்து இருக்கும். அதிலும் பெட்ரோல் பங்கில் அது கூடுதலாகவே இருக்கும். இதுதான் துரதிஷ்டவசமாக சில நேரங்களில் வாகனங்கள் தீப்பிடிக்கவும் வழிவகுக்கிறது.

இதேபோல் காற்றின் அழுத்தம், வேகம் காரணமாக வும் தீப்பற்றும் வாய்ப்பு உண்டு. கம்பெனி ரகம் இல்லாத லோக்கலாக வாங்கி போட்டு உள்ள செல்போன் பேட்டரிகள் கூட இந்த அழுத்தத்தில் வெடிக்கும் வாய்ப்பு அதிகம். அதனால் தான் பல பெட்ரோல் நிலையங்களில் செல்போன் பேசாதீர் என எழுதியே வைத்து உள்ளனர்.

கார்களில் சிலர் பட்ஜெட்டை மிச்சம் பிடிப்பதாக நினைத்து குறைந்த பேட்டரியை போட்டு இருப்பார்கள். தரம் குறைந்த, லோக்கல் பேட்டரி போடும் போது பெட்ரோல் துகள்கள் பட்டால் அவையும் வெடிக்கும் வாய்ப்பு அதிகம்.

டூவீலரில் பெட்ரோல் போடுபவர்கள் குறைந்தபட்சம் குடும்பத்தினரையாவது இறக்கி விட்டு விட்டு போட்டால் முன்னெச்சரிக்கையாக இருக்கும்.


நண்பர்களுடன் பகிர :