கொலை செய்யபட்ட கணவர்… திருமணம் செய்த அதே நாளில் பிறந்த குழந்தை : வைரலாகும் புகைப்படம் Description: கொலை செய்யபட்ட கணவர்… திருமணம் செய்த அதே நாளில் பிறந்த குழந்தை : வைரலாகும் புகைப்படம்

கொலை செய்யபட்ட கணவர்… திருமணம் செய்த அதே நாளில் பிறந்த குழந்தை : வைரலாகும் புகைப்படம்


கொலை செய்யபட்ட கணவர்… திருமணம் செய்த அதே நாளில் பிறந்த குழந்தை : வைரலாகும் புகைப்படம்

தெலுங்கானாவை சேர்ந்தவர் அம்ருதா, கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு தன் காதல் கணவரை (பிரனய்) ஆணவக்கொலையில் பறிகொடுத்தார்.

பல நாட்கள் கழித்து மீண்டும் அவர், அவரது முகநூல் பக்கத்தை பயன்படுத்த ஆரம்பித்துள்ளார். அதற்கு காரணம், திருமணம் நடந்த நாளன்று இறந்து போன கணவரே மகனாக வந்து பிறந்ததுதான்.

தாழ்த்தப்பட்ட சாதி நபரான பிரனய் என்பவரை அம்ருதா காதல் திருமணம் செய்துகொண்டதால், கடும் எதிர்ப்பு தெரிவித்தர் அவரது தந்தை, பின்னர் அவரது அப்பா கொலை செய்ய திட்டம் தீட்டி பிரனய்யை ஆணவக்கொலையும் செய்தார்.

அம்ருதாவின் கணவர் பிரனய் குமார் கொல்லப்படும்போது அம்ருதா ஆறு மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில் இவர்கள் திருமணம் நடைபெற்ற நாள் அன்றே, ஆண் குழந்தை பிறந்துள்ளதால், மகிழ்ச்சியில் இருக்கும் அம்ருதா தனது முகநூல் பக்கத்தில், தனது கணவர் புகைப்படத்திற்கு அருகில் நின்று பிறந்த குழந்தையுடன் புகைப்படம் எடுத்து பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகியுள்ளது. இவருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.


நண்பர்களுடன் பகிர :