அன்று ஆகாயத்தை அண்ணாந்து பார்த்தவர்கள் இன்று ஆகாய விமானத்தில்! திருப்பூரில் தனி ஒருவனின் சாதனை... Description: அன்று ஆகாயத்தை அண்ணாந்து பார்த்தவர்கள் இன்று ஆகாய விமானத்தில்! திருப்பூரில் தனி ஒருவனின் சாதனை...

அன்று ஆகாயத்தை அண்ணாந்து பார்த்தவர்கள் இன்று ஆகாய விமானத்தில்! திருப்பூரில் தனி ஒருவனின் சாதனை...


அன்று ஆகாயத்தை அண்ணாந்து பார்த்தவர்கள் இன்று ஆகாய விமானத்தில்!  திருப்பூரில் தனி ஒருவனின் சாதனை...

ஒன்றல்ல... இரண்டல்ல...ஒரே ஊரைச் சேர்ந்த 120 பேர் ஆகாய விமானத்தில் பயணித்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்து உள்ளது. இதில் என்ன நெகிழ்ச்சி என்று கேட்டால் இவர்கள் அனைவரும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மிகவும் பாவப்பட்ட ஒரே ஊர்க்காரர்கள்.





திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகில் உள்ள தேவராயன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவிகுமார். பின்னலாடை மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவருக்குத்தான் ஒரு வித்தியாச ஆசை வந்தது. சின்ன வயதில் இருந்து ஆகாய விமானத்தை ஆச்சர்யமாகப் பார்த்த தன் கிராமத்து முதியவர்கள் அனைவரையும் ஆகாய விமானத்தில் அழைத்துச் செல்ல வேண்டும் என்பது தாம் அது.

இதற்காக மூன்று மாதங்கள் அவரது நண்பர்களுடன் அழைந்து ஊரில் இருந்து விமான பயணத்துக்கு ஆசைப்பட்ட 120 பேரை தேர்ந்தெடுத்தனர். இவர்கள் அனைவரும் வேன் மூலம் ஊரில் இருந்து கோவைக்கு அழைத்து வரப்பட்டனர்.





தொடர்ந்து அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டனர். தொடர்ந்து சென்னை மெரினாவில் உள்ள தலைவர்களின் நினைவிடங்கள், காஞ்சிபுரம், திருவண்ணாமலை கோயில்களுக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர். அந்த 120 பேரில் சில கிறித்தவர்கள், இஷ்லாமியர்களும் இருந்தனர்.





அவர்களுக்காக சர்ச், மசூதிகள் ஆகியவற்றுக்கும் அழைத்து செல்லப்பட்டனர். இந்த நெகிழ்ச்சியான சம்பவத்துக்கு இலவசமாக அனைவரையும் அழைத்துச் சென்ற ரவிக்குமார், நான் முதன் முதலில் வியாபார விசயமாகத்தான் விமானத்தில் சென்றேன். அப்போது என் நினைவில் என் ஊரில் இதை ஏக்கத்தோடு பார்ப்பவர்கள் தான் வந்தார்கள். அப்போது இருந்தே இதை யோசித்தேன். அது இப்போது நிறைவேறி இருக்கிறது. என்கிறார்.

எளிய மக்களின் விமானப் பயணம் அவர்களுக்கு அவர்களின் வாழ்விலும் முக்கியமான விசயம் ஆக இடம் பிடித்து விட்டது.


நண்பர்களுடன் பகிர :